ஏழும் ஏழும் பதினாலாம்

ஏழும் ஏழும் பதினாலாம்

ஏழும் ஏழும் பதினாலாம்

ஏழும் ஏழும் பதினாலாம்

40.00

In stock

40.00

ஏழும் ஏழும் பதினாலாம் புத்தகம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்..

Publisher:
Author:

Description

ஏழும் ஏழும் பதினாலாம் புத்தகம் பற்றிய குறிப்புகள்..

அனைத்துக் கலைவடிவங்களிலும் மிகவும் கடினமானது குழந்தைகளுக்கு பாடல்கள் எழுதுவது தான்.

பாடல்கள் எளிமையாக இருக்கவேண்டும். பெரும்பாலும் மூன்று அசைச்சொற்களோடு இருக்கவேண்டும். சந்தநயம் வேண்டும். வரிகளின் முதலடியோ ஈற்றடியோ எதுகை மோனையோடு இருக்க வேண்டும்.

இசைக்கு இசைவாக ஏகாரத்தில் முடிகிற சொற்களைத் தேர்வுசெய்ய வேண்டும். பாடலாகப் பாடப்படுகிற இசைக்கோர்வை வேண்டும்.

குழந்தைகளுக்கு இந்த உலகை அறிமுகப்படுத்தவோ, உலக நடைமுறைகளைப் பற்றிய சித்திரங்களையோ, இயற்கையைப் பற்றிய காட்சிகளையோ, அன்றாட வாழ்வின் நடவடிக்கைகளைப் பற்றியோ, வேடிக்கையாகவோ, மானுட அறம் குறித்தோ, கதையாகவோ, உறவுகளின் மேன்மை குறித்தோ, கருத்துகளும் பொதிந்திருக்க வேண்டும்.

மொழியை குழந்தைகள் தெரிந்து கொள்ளும் விதமாக இருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேல் குழந்தைகளின் மொழியில் இருக்கவேண்டும்.

ஏழும் ஏழும் பதினாலாம்
அழ. வள்ளியப்பா

இவ்வளவு கடினமான கலைவடிவத்தை தன்னுடைய அர்ப்பணிப்பினாலும், கடும் உழைப்பினாலும் கைவரப்பெற்றவர்கள் தமிழ்க்குழந்தை இலக்கியத்தில் பாரதி, பாரதிதாசன், கவிமணி, அழ.வள்ளியப்பா, பெ.தூரன், ஆ.கணபதி, போன்ற மிகச்சிலரே.

அவர்களுள் முதன்மையானவர் அழ.வள்ளியப்பா. சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியிருக்கிறார்.

தன் வாழ்நாள் முழுவதும் குழந்தை இலக்கியத்துக்காகவே வாழ்ந்தவர். குழந்தை எழுத்தாளர் சங்கம் உருவாகக்காரணமானவர்.

அவருடைய பாடல்களிலிருந்து பதினைந்து பாடல்களைத் தேர்ந்தெடுத்து பஞ்சு மிட்டாய் சிறார் குழு நூலாகக் கொண்டு வருகிறார்கள்.

ஏழும் ஏழும் பதினாலாம் புத்தகம் சிறுவர்களின் வாசிப்பு பழக்கதை உருவாக்கும்..

சிறுவர்கள் நூல்கள்  பஞ்சுமிட்டாய் இதழ்கள்

Reviews

There are no reviews yet.


Be the first to review “ஏழும் ஏழும் பதினாலாம்”

has been added to your cart:
Checkout