அமைதியைப் பரப்பும் சடாகோவின் கொக்கு எதை பற்றி பேசுகிறது..
இந்த நிஜக்கதையை எழுதிய எலினார் கோர் 1922ல் கனடாவில் பிறந்தவர்.
சிறு வயதிலிருந்தே வாசிப்பும் எழுத்தும் அவருக்குப் பிடித்தமானவையாக இருந்தன. பின்னர், அமெரிக்காவில் குடியேறி வாழ்ந்த அவர் சிறார் புத்தகங்களுக்காக அறியப்பட்டவராக இருந்தார்.
இதழியல் பணியின் ஒரு பகுதியாக “ஒட்டாவா ஜர்னல்” இதழ் சார்பில் போரால் ஜப்பான் அடைந்த நிலை குறித்து எழுதியிருக்கிறார்.
அவருடைய புகழ் பெற்ற புத்தகம் சடாகோவும் ஆயிரம் காகிதக் கொக்குகளும் (Sadako and the Thousand Paper Cranes) 1977ல் வெளியானது. 15 லட்சத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் விற்பனையான புத்தகம் இது.
இரண்டாம் உலகப்போரின் இறுதியில் ஹிரோஷிமாவின் மீது அமெரிக்கா வீசிய அணுகுண்டால் சடாகோ சசாகி என்ற சிறுமி இரத்தப் புற்றுநோய்க்கு ஆளானாள்.
ஜப்பானியர்களின் நம்பிக்கையின்படி நீண்ட நாள் வாழ்வதற்காக ஆயிரம் காகிதக் கொக்குகளைச் செய்ய சடாகோ சசாகி முயல்கிறாள்.
அவளால் ஆயிரம் காகிதக் கொக்குகளை செய்ய முடிந்ததா? சடாகோ என்ன ஆனாள் என்பதே இந்த நிஜக்கதை.
Reviews
There are no reviews yet.