இயற்கையின் விலை என்ன குறுநூலைப் பற்றிய குறிப்பு
நம் உடலின் அனைத்துப் பகுதிகளையும் ரத்தம் எப்படி இனைக்கிறதோ, அதுபோல் உலகில் உள்ள அனைத்தும் ஒன்றுடன் ஒன்று பிரிக்க முடியாத வகையில் பிணைக்கப்பட்டுள்ளன.
வாழ்க்கை என்கிற வலையை நாம் நெய்யவில்லை.
அந்தப் பெரிய வலையின் ஒரு சிறு பகுதி மட்டுமே மனிதர்களான நாம்.
அந்த வலைக்கு நாம் என்னவெல்லாம் செய்கிறோமோ, அது எல்லாமே நமக்கு நாமே செய்துகொள்பவைதான்.
புதிதாகப் பிறந்த குழந்தை எப்படித் தாயின் இதயத்துடிப்பை எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்க விரும்புகிறதோ, அதுபோல் நாங்கள் இந்த பூமியை எப்போதுமே விரும்புகிறோம்.
– செவ்விந்தியத் தலைவர் சியாட்டில்
கன்னுகுட்டியின் சீனு –
இது குழந்தைகளின் முதல் படிப்பாக இருக்கவேண்டும்