மரப்பேச்சி என்ற நூலைப் பற்றி
தமிழகம் அறியப்பட்ட சூழலியல் கதை சொல்லியோடு பயணித்து திரும்புகையில் உலகளாவிய சூழலியல் செய்திகளை புதிதுபுதிதாக அறிந்திருப்போம்!
இருபது வருடங்களாக காடுகளையும் கானுயிர்களையும் பண்பாட்டு விழுமியங்களோடு உணரச் செய்தவர்.
நிலம் என்பது உயிர்களின் கருவறை! ஆனால், அது உற்பத்திக் கருவியாக மாற்றப்பட்டுள்ளது. வளர்ச்சி என்ற பெயரில் பெயரில் நிலத்தை உற்பத்திக்கருவியாக பார்க்கும் சமூகம், உயிர்களை எவ்வாறு நேசிக்கும் என்ற கேள்வியை வலி மிகுந்த சொற்களால் எழுப்பியவர்.
இவர் எழுதிய சூழலியல் நூல்கள் பலவும் தமிழக அளவில் முதன்மையான ஆவணமாகக் கருதப்படுகின்றன.
தமிழர்களின் பண்பாட்டு வேர்களை மண்ணிலும், மனதிலும் பதியச் செய்யும் காடறிதல் பயணங்களின் ஐயா, அப்பா, தாத்தாவென அழைக்கும் குரல்கள் சூழ்ந்திருக்கும் களத்தில் இருப்பார்.





Reviews
There are no reviews yet.