ஊர்ப்புறத்துப் பறவைகள்

ஊர்ப்புறத்துப் பறவைகள்

ஊர்ப்புறத்துப் பறவைகள்

ஊர்ப்புறத்துப் பறவைகள்

100.00

In stock

100.00

Free Shipping for Orders above Rs. 500

ஊர்ப்புறத்துப் பறவைகள் புத்தகம் பறவைகள் அருகில் உங்களை கொண்டு செல்லும்..

Publisher:
Author: ,

Description

தமிழில் சூழலியலை எளிமையோடும், உயிர்ப்போடும் எழுதி வருபவர்களில் குறிப்பிடத்தக்கவர் கோவை சதாசிவம்.

ஊர்ப்புறத்துப் பறவைகள் புத்தகத்தில் மிக எளிமையாக நம்மை சுற்றி இருக்கும் பறவைகளை பற்றி அறிமுகம் செய்கிறார்.  உங்கள் வீட்டில் சிறுவர்களுக்கு நிச்சயம் ஊர்ப்புறத்துப் பறவைகள் வாங்கி கொடுங்கள். பறவைகள் பக்கம் நிச்சயம் அவர்கள் கவனம் திரும்பும்.

ஊர்ப்புறத்துப் பறவைகள்
ஊர்ப்புறத்துப் பறவைகள்

கோவையில் பிறந்து கோவை சதாசிவம் திருப்பூரில் வசிக்கிறார். 2009-ல் வெளிவந்தஉயிர்ப்புதையல் கட்டுரைத் தொகுதி இவருள் ஏற்படுத்திய தாக்கத்தை வாசிப்போரின் மனதிலும் ஏற்படுத்தி, சுற்றுச்சூழல் அமைப்புகளை தோற்றுவித்தது. மயிலு ‘சிட்டு’ ஆகிய கானுயிர் ஆவணப் படங்களை இயக்கி பள்ளிகள் தொடங்கி பல்கலைக் கழகம் வரை திரையிட்டு பறவைகள் பருவநிலை மாற்றம், பல்லுயிர் பெருக்கமென் உரையாடுபவர்.

பறவைகள் பலவிதம் கட்டுரையை மாணவர்களுக்கு பாடமாக்கி பறவைகளின் இருத்தலை உணர்த்தியவர். அண்மைக்காலமாய் இவரின் எழுத்து எல்லா உயிர்களும் இன்புற்று வாழும் ஓர் உன்னத நிலையை நோக்கிப் பயணிக்கிறது.

ஒரு மாலை பொழுதில் ஊர்ப்புறத்துப் பறவைகள் நூலை நீங்கள் வாசித்துக்கொண்டு இருந்தால் நான் மகிழ்ச்சி அடைவேன் என்ற ஒரு வரி புத்தகத்தின் தொடக்கத்தில் வராமல் புத்தகத்தின் முடிவில் வருவது அமர்களமான வரியாகவே தெரிகிறது.

புத்தகத்தை மாலையில் வாசியுங்கள் என்று நம்மை கட்டாயபடுத்தாமல் கடைசியில் அந்த வரியை எழுதயுள்ளார். வாசிக்கும்பொழுது உண்மையாகவே அப்பொழுது மாலையாக இருந்தால் ஆசிரியருடன் சேர்ந்து நமக்கும் மகிழ்ச்சியை தந்திருக்கும். நான் வாசிக்கும்பொழுது மாலை கடந்துவிட்டது, இரவில் வாசித்து முடித்தேன். ஏனென்றால் கடைசியில் தானே அந்த வரி நம் கண்ணில்படுகிறது.

மொத்தம் இருபத்து ஐந்து பறவைகளை பற்றி படிக்க போரடிக்காமல் எழுதி சென்றுள்ளார். பறவைகள் படங்களுடன் கட்டுரைகள் இருப்பது படித்த உடன் சுலபமாக நினைவில் வைத்துகொள்ள முடிகிறது.

செம்பகம் பறவை பற்றிய கட்டுரையில் வலசை பறவைக்கும், அதிகம் துரம் பறக்காத தரையில் கூடு கட்டி வாழும் பறவையான செம்பகம் பறவையை பற்றி குறிப்பிட்டுள்ளார். ஏன் பறவைகளில் இத்தனை வேறுபாடு என்பதற்கு – ஒரு சில பறவைகள் பல ஆயிரம் கிலோமீட்டர் பறந்து செல்கிறது சில பறவைகள் பக்கத்து ஊருக்கு கூட செல்வதில்லை என்பதற்கு விளக்கம் இப்படி எழுதியுள்ளார் அதிக பறப்புத் திறன் கொண்ட பறவைகள் தான் உலகைச் சுற்றி வலசை வருகின்றன என்ற வரி உண்மை.

ஆரம்ப பறவையாக தையல் சிட்டு நம்மை அழைக்கிறது. மாணவர் ஆசிரியர் இடையே நிகழும் உரையாடலாக அவற்றை எழுதியுள்ளது கதை படிப்பது போல் சுவாரசியமாக செல்கிறது. பெரும்பாலும் பறவைகளுக்கு அதன் பண்பை கொண்ட பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது என்று குறிப்பிடுகிறார்.

ஊர்ப்புறத்துப் பறவைகள் புத்தகம் பொழுதுபோக்கில் நல்ல மாற்றதை கொடுக்கும் என்பது உண்மை..

கோவை சதாசிவம் மற்ற நூல்கள் 

 

Reviews

There are no reviews yet.


Be the first to review “ஊர்ப்புறத்துப் பறவைகள்”

has been added to your cart:
Checkout