பஞ்சு மிட்டாய் 7ம் இதழ்
பஞ்சு மிட்டாய் 7ம் இதழ்
₹50.00
₹50.00
உங்கள் வீட்டு சிறுவர்களுக்கு பஞ்சு மிட்டாய் இதழ் நல்ல தொடக்கமாக்கும்..
- Description
- Reviews (0)
Description
பஞ்சு மிட்டாய் 6 வது இதழ் பற்றிய குறிப்புகள்
காட்டுப் பக்கம் போவோமா?” என்ற விளையாட்டினை உருவாக்கியுள்ளோம். முதல் பார்வையிலே சிறுவர்களை புத்தகப் பக்கம் கண்டிப்பாக இந்த விளையாட்டு ஈர்க்கும்.
விளையாட்டின் எண்ணத்திற்கு உயிரோட்டம் தந்திருக்கிறது ஓவியர் ராஜன் அவர்களின் ஓவியம். இந்த விளையாட்டிற்கு மட்டுமல்ல கதைகள், பாடல்கள், புதிர் மற்றும் அட்டைப் படம் என பஞ்சு மிட்டாய் இதழ் அவரது தூரிகையால் பளபளவென மின்னுகிறது.
சிறார் இலக்கியத்தின் முக்கிய எழுத்தாளர்களான என்.சொக்கனின் பாடலும், விஷ்ணுபுரம் சரவணின் கதையும் இந்த இதழில் வந்திருக்கிறது.
சென்ற இதழில் முக்கியமானதாக ஆசிரியர்கள் மத்தியில் பேசப்பட்ட ராஜ் சிவா & யாழு சிவாவின் காமிக்ஸ் வடிவம் இம்முறையும் வந்திருக்கிறது.
ஆம், அறிவியல் துணுக்குகளை தங்களது காமிக்ஸ் மூலம் சிறார்களுக்கு கொண்டு சேர்க்கும் அவர்களது எண்ணங்களை பஞ்சு மிட்டாயும் சேர்ந்து பயணிக்கிறது.
12 வயதிற்குள்ள் குழந்தைகளுக்கு அறிவியல் விசயங்களை ஒரு கதை ஓட்டத்தில் சொல்ல வேண்டும் என்றதும் விரிவாக எங்களுடன் உரையாடி அழகான காமிக்ஸை வடிவத்தை கொடுத்தனர்.
ஒவ்வொரு பஞ்சு மிட்டாய் இதழிலும் புதிர் விளையாட்டிற்கு சிறுவர்களிடையே நல்ல எதிர்ப்பார்ப்பு உண்டு.
இம்முறையும் அழகான ஓவியத்துடன் குழந்தைகளுக்கு மிகவும் பரிச்சயமான எளிமையான வார்த்தைகளுடன் புதிர் வந்துள்ளது. அதேப் போல் சிறார்களை விளையாட தூண்டும் மரபு விளையாட்டின் அறிமுகமும் வந்துள்ளது.
இம்முறை சிறார்களின் கதைகள் வெவ்வேறு இடங்களிலிருந்து பெறப்பட்டது.
ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு வடிவம். இந்தக் கதைகள் அனைத்துமே நிஜ வாழ்வில் குழந்தைகள் காணும் விசயங்களை தங்களது கற்பனைகளால் கதைகளாக மாத்தியுள்ளனர் என்றே சொல்ல வேண்டும்.
இவை இதழுக்காக படைக்கப்பட்ட கதை அல்ல. வீட்டிலோ அல்லது பள்ளியிலோ அவர்கள் படைத்த கதைகளை தான் நாங்கள் இதழில் கொண்டுவந்துள்ளோம்.
கதைகள் போல ஓவியங்களும் சிறார்களுக்கான முக்கியமான தளமாக கருதுகிறோம். ஒவ்வொரு முறையும் பல்வேறு பள்ளிகளுடனும் செயற்பாடளர்களுடன் கதைகளுக்கான ஓவியங்களை சிறார்களிடமிருந்து பெறுகிறோம்.
எங்களுடன் சேர்ந்து படைப்புகளை கொண்டு வர விரும்பும் நண்பர்களுடன் தொடர்ந்து ஓவியங்கள் குறித்தும் சிறார்களின் சுதந்திரம் குறித்தும் உரையாடி, படைப்புகளை பெறுகிறோம்.
இதழுக்காக தான் வரைகிறார்கள் என்பதை அறிவிக்காமல் ஒரு நிகழ்வாக நடத்தி கதைகளை சிறார்களுக்கு சொல்லி ஓவியங்களை பெற சொல்கிறோம்.
தங்களது சிறார்களை புரிந்துக் கொள்ள மேலும் இதுப் போன்ற செய்ல்பாடுகள் உதவுவதாக நண்பர்களும் உணர்கிறார்கள்.
குழந்தைகளின் சிறந்த இதழ் பஞ்சு மிட்டாய் ஆகும்.
Be the first to review “பஞ்சு மிட்டாய் 7ம் இதழ்” Cancel reply
- #3 Best Seller in All Tamil Books
- #3 Best Seller in Children Tamil Books
Reviews
There are no reviews yet.