பஞ்சு மிட்டாய் 14-வது இதழ் குறித்து விவரங்கள்
சிறார் உலகை பிரதிபலிக்கும் நோக்கத்துடனே பஞ்சு மிட்டாய் காலாண்டிதழ் இயங்குகிறது. சிறார்களின் படைப்பும் முழு சுதந்திரத்துடன் இருக்கும்படி பார்த்துக்கொள்கின்றோம். சிறார்கள் சொல்லும் கதைகள் அவர்களது மொழியிலே பதிவு செய்யப்படுகின்றன, ஓவியங்களிலும் கூட பெரியோர்களின் தலையீடு இல்லாமல்தான் இருக்கின்றன. இதழுக்கான படைப்புகளும் நிகழ்வுகள் மூலம் எதார்த்தமான சூழலில் எடுக்கப்படுகின்றன. வாசிக்கும் பழக்கத்தை சிறார்களுக்கு விதைக்கும் வகையில் இதழ் வடிவமைக்கப்படுகிறது.
பஞ்சு மிட்டாய் இதழ் – சிறுவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள்,குழந்தை செயற்பாட்டாள்ர்கள், எழுத்தாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பல பெற்றோர்களும் ஆசிரியர்களும் தங்களது பகுதி பிள்ளைகள் பஞ்சு மிட்டாய் இதழை ரசித்ததைப் பற்றியும், இதழைப் பார்த்த பிறகு சிறுவர்களுக்கு கதைகள் மீது ஏற்பட்ட ஆர்வத்தைப் பற்றியும், முதன் முதலாக குழந்தைகள் சுயமாக உருவாக்கிய கதைகள் பற்றிய மகிழ்ச்சியையும் பகிர்ந்து வருகின்றனர்.
கதைகள், பாடல்கள், வாசிப்பு அனுபவம், பாரம்பரிய விளையாட்டு, புதிர், காமிக்ஸ், அறிவியல், சூழலியல், புதிய விளையாட்டுகள், கேள்வி பதிகள், வண்ணமையான் ஓவியங்கள், நேர்த்தியான வடிவமைப்பு, பளபளக்கும் தாள் என பஞ்சு மிட்டாய் சிறார்களின் மகிழ்ச்சையை மட்டுமே ஆதரமாக கொண்டு செயல்படுகிறது.
Reviews
There are no reviews yet.