சிட்டு-குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும்

சிட்டு-குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும்

Sittu-Kuruvikalin Vazhvum Vizhichiyum - Aadhi Valliappan

சிட்டு-குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும்

100.00

In stock

100.00

(Free Shipping Above 500)

நம் வீட்டுக்கு அருகில் சிட்டுக்குருவி தென்படவில்லையெனில், அந்தப் பகுதியிலிருந்தே அது முற்றிலுமாக அழிந்துவிட்டது என்று சொல்லிவிடமுடியாது.  நாமாக ஒரு காரணத்தை, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதும் கூடாது.

Publisher:
Author:

View cart

Description

எல்லாப் பறவைகளுமே அழகானவை. மனிதகுலத்திற்குப் பலவிதங்களில் நன்மை செளிணிபவை. சிட்டுக்குருவியும் அதில் அடக்கம். எனினும் நமக்குச் சிட்டுக்குருவிகள் ஏனைய பறவைகளைவிட கொஞ்சம் உசத்திதான். சிறு வயதிலிருந்து நம் வீட்டினருகிலேயே பார்த்துப் பழக்கப்பட்டவை சிட்டுக்குருவிகள். அவை சிறகடித்துப் பறப்பதையும், தத்தித்தத்திச் செல்வதையும், கூடு கட்ட இடம் தேடுவதையும், தானியங்களைக் கொத்திக்கொத்திச் சாப்பிடுவதையும், இரண்டு குருவிகள் சண்டையிடும்போது தங்கள் கால்களைப் பிணைத்துக்கொண்டு படபடவெனச் சிறகடித்துக் கீழே விழுவதையும் கண்டிருப்போம்.

நமது வீட்டில் கூடு கட்டி இருந்தால் குஞ்சுகள் எழுப்பும் ஒலியைக் கேட்டு காலையில் நாம் கண் விழித்திருப்போம். இப்படி நம் அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாக இருந்த

சிட்டுக்குருவி சில பகுதிகளில் இருந்து காணாமல் போனது. இவை திடீரென ஒரே நாளில், இருந்த இடத்தைக் காலி செய்துவிட்டுப் போகவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக எண்ணிக்கையில் குறைந்து, பின்பு முற்றிலுமாக அற்றுப்போயின. முக்கியமாக நகரங்களின்

சில பகுதிகளில். இவை ஏன் குறைந்து போயின என்பதைக் கண்டறிவதற்கு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.  அதன் பின்னரே தெளிவான காரணத்தை அறிந்துகொள்ள முடியும். ஓர் உயிரினம் குறைந்து போய்விட்டது என எப்போது சொல்ல முடியும்? பல காலமாக, அறிவியல்பூர்வமாகக் கணக்கெடுப்பு நடத்தி, முன்னொரு காலத்தில் எத்தனை இருந்தது, தற்போது அந்த எண்ணிக்கையில் குறைந்துபோளிணிவிட்டது என்று சொல்ல முடியும். ஆனால், நம் வீட்டுக்கு அருகில் சிட்டுக்குருவி தென்படவில்லையெனில், அந்தப் பகுதியிலிருந்தே அது முற்றிலுமாக அழிந்துவிட்டது என்று சொல்லிவிடமுடியாது.  நாமாக ஒரு காரணத்தை, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதும் கூடாது.

Reviews

  1. Dinesh (verified owner)

    செல் போன் மட்டும் காரணி அல்ல சிட்டு குருவி வீழ்ச்சிக்கு என்பதை கொடிட்டு காட்டும் நூல். நல்ல முயற்சி.


Add a review

has been added to your cart:
Checkout