தி.நா.சுப்பிரமணியன் கட்டுரைகள் : இக்கட்டுரைகளின் ஆசிரியர் தி.நா சுப்பிரமணியன் குறித்து கலாநிதி க.கைலாசபதி அவர்கள் பூர்வகலாவில் முன்பு எழுதியது,
“1930 ஆம் ஆண்டளவிலே எழுதத் தொடங்கிய தி.நா.சு. நூல்களைவிட, சஞ்சிகைகளுக்கு எழுதியுள்ள கட்டுரைகளும் கதைகளும் குறிப்புகளும் நூற்றுக்கணக்கானவை. ஆக்க இலக்கியத்திலாயினும் சரி, அறிவு இலக்கியத்திலாயினும் சரி, ஆய்வறிவுக்கும், உண்மைக்கும், நேர்மைக்கும் அவர் அளித்த முக்கியத்துவமே, இன்றைய தமிழ்நாட்டு ஆராய்ச்சியாளர் பெரும்பாலாரிலிருந்து அவரை வேறுபடுத்துகிறது.”
“ஆராய்ச்சி மொழி ஆங்கிலமே” என்றிருந்த காலத்தில் தி.நா. சுப்பிரமணியன் தனது நூலைத் தமிழில் எழுதி உதவினார்.
தாய்மொழி மூலம் உயர்கல்வியும் ஆராய்ச்சிகளும் நடைபெற வேண்டும் என்று சுப்பிரமணியன் ஆரம்பத்திலிருந்தே கருதி வந்தமைக்கு இம்முயற்சியும் சிறந்த சான்றாகும்.”
“என்னை பொறுத்தவரையில் திரு. சுப்பிரமணியனது சிறப்பியல்பு அவரது நடுவுநிலைமையாகும்.
கடந்த முப்பது நாற்பது வருடங்களாகத் தமிழகத்து ஆய்வாளர் பலரை ஆட்டிப்படைத்து வரும் மனக்கோட்டங்களுக்கும் துவேஷங்களுக்கும் அப்பாற்பட்டவராய் ஒருபாற் கோடாமல் விடயங்களை நோக்கி ஆராய்ந்தார் அவர்.
பிராமண சமூகத்தைச் சேர்ந்தவராய் இருந்தபோதிலும் சமஸ்கிருத வெறி அவரிடத்துக் கிஞ்சித்தும் காணப்படவில்லை.
அதைப்போலவே ஆராய்ச்சியைப் பொழுதுபோக்காய்க் கொண்டவராய் இருந்தபோதும் மேற்போக்காகக் கலையில் ஈடுபட்ட dilettante அல்லர்.
கண்டிப்பான அளவுகோல்களை கடைப் பிடிப்பவராய் விளங்கினார்; போலிப் பேச்சுப் பாவனையும் அவரிடம் இருந்ததில்லை.”
Reviews
There are no reviews yet.