உணவின் வரலாறு என்ற நூலைப் பற்றி
உலகம் நீராலும் காற்றாலும் ஆனது. ஆனால் உயிர்கள், உணவால் மட்டுமே ஆனவை.
மனித குலம் தோன்றிய வினாடி முதல் இன்று வரை நமது எல்லா தேடல்களுக்கும் அடிநாதமாக இருப்பது பசியும் ருசியும் மட்டும்தான்.
உணவு என்ற ஒன்று இல்லவேயில்லை என்றால் நாம் இருப்பது சாத்தியமில்லை. மனிதனின் வரலாறு என்பது உணவின் வரலாறோடு பின்னிப் பிணைந்தது.
முதலில் பசிக்காக சாப்பிட்டார்கள். பிறகு விளைந்ததைச் சாப்பிட்டார்கள்.
அதன்பின் வினைவித்துச் சாப்பிடக் கற்றார்கள்.
விதவிதமான உணவு வகைகள். ஊருக்கு ஊர், தேசத்துக்கு தேசம், கண்டத்துக்குக் கண்டம் மாறுபடும் உணவுகள்.
அவற்றின் ருசி.
இந்த நூல், மனிதனின் முதல் தேவையாகவும் மூலாதாரத் தேவையாகவும் உள்ள உணவின் வரலாறைச் சொல்கிறது.
Reviews
There are no reviews yet.