உழவின் திசை – அ. முத்துக்கிருஷ்ணன்

உழவின் திசை – அ. முத்துக்கிருஷ்ணன்

உழவின் திசை- முத்து கிருஷ்ணன்

உழவின் திசை – அ. முத்துக்கிருஷ்ணன்

100.00

In stock

100.00

உழவின் திசை புத்தகத்தில் அமெரிக்க விதை நிறுவனங்கள் 1,50,000 இந்தியப் பாரம்பரிய விதைகளைத் திருடியதையும் அம்பலப்படுத்துகிறார்.

 

Publisher:
Author:

Description

அ. முத்துக்கிருஷ்ணன் எழுதிய உழவின் திசை புத்தகத்தை பற்றி வாசகர் பார்வை

விவசாயியின் மீது சாயம் பூசுவதே விவசாயம் என்ற நிலைக்கு விவசாயம் தள்ளப் பட்டு உள்ளத்தை பூசி மொழுகாது பதிவு செய்திருக்கிறார் பட்டவர்த்தனமாக.

இன்றைய சூழ்நிலையில் நாகரிகம் தொழில்நுட்பம் நம் சொந்த வளர்ச்சி என்ற நமது தேடுதல் அமைந்துவிடுவதால் விவசாயமும் நமக்கு உணவளிக்கும் விவசாயி நிலையைப் பற்றியும் நம்மால் உணர்ந்து கொள்ள இயலவில்லை.

ஒரு எட்டு மணி நேர உழைப்பிற்கே ஊதிய உயர்வும் ஊக்கத்தொகையும் எதிர்பார்க்கும் மனநிலையில் இரவும் பகலும் விதைத்து வளர்த்து காயாகி கனியாகி சந்தையில் கொண்டு சேர்க்கும் வரை ஊனை வருத்தி உயிர் வளர்க்க பாடுபடும் தாயுமானவர்களை இந்த உலகம் மறந்ததை, அரசுகள் வதைப்பதை, வஞ்சிப்பதை,
ஆதாரங்களை எடுத்து வைத்து , தெரியாத பல விசயங்களை தந்து இருப்பது, படிக்கும் போது பதறுகிறது.

நம் தானியங்கள் எவ்வாறு உலக நாடுகள் காப்புரிமை பெற்று கொண்டது என்றும், அரசியலுக்காக தானியங்களை அழுக வைத்து அரசுகள் வேடிக்கை பார்த்ததும் குமுறுகிறது உள்ளம்.

உழவின் திசை

இயற்கை தானியங்களை விதைகளை அழித்து, உலக கார்ப்பரேட் நிறுவனங்களில் இந்தியாவிற்குள் நுழைந்து மரபணு விதைகளை அறிமுகப்படுத்தி இயற்கையை கொலைசெய்யும் முயற்சியில் மனிதனை மேற்கொண்டிருப்பது இயற்கையின் அழிவையே காட்டுகிறது.

2010 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்திய மக்கள் தொகையில் மூன்று வேளை உணவு கிடைக்காதவர்கள் 32 கோடி என்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக 14 ஆயிரத்து 900 குழந்தைகள் தினசரி உலகளவில் இறக்கின்றார்கள் என்றும், அதில் இந்தியாவில் மட்டும் 5 ஆயிரம் குழந்தைகள் இருக்கிறார்கள் என்றும் இந்தியாவில் 5 சதவீத ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 47% பேர் தீவிர ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் என்பதும் வேதனைக்குரிய விஷயம்.

நம் தேசத்தில் 1997 முதல் 2005 வரை 89362 பேர் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதை கேட்கும் போது மதியம் உணவு கூட இறங்க மறுக்கிறது.

ஊடகங்கள் திரை உலக பேட்டியையும் அரசியலுக்கும் தரும் முக்கியத்துவத்தை போல, விவசாயத்தை விவசாயிகளின் நிலையை ஊடகங்கள் தனி நிகழ்ச்சிகளாக தந்து கண்டிப்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு புரட்சியை ஏற்படுத்த வேண்டும்.

இப்புத்தகத்தில் உள்ள நிகழ்வுகளை படிக்கும் பொழுது எப்படி அரசாங்கத்திற்கு கோரிக்கை வைப்பது என்று தெரியவில்லை. இருப்பினும், விவசாயத்தையும் கார்ப்பரேட் நிறுவனமாக மாற்றி விவசாயிகளுக்கு வருமானம் வரக்கூடிய அளவிற்கு அலுவலர்களை உருவாக்கி அவர்களை மேம்படுத்தினால் மட்டுமே நாளைய சமுதாயம் நோயில்லா மல் தலை நிமிர்ந்து வாழும்.

எனக்கும் என்னைப்போன்ற இளைஞர்களுக்கு அழகிய உழவின் திசை புத்தகத்தை வழங்கி என் கண்களை திறந்து பார்க்க வைத்த ஆசிரியர் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். அவர்களது பசுமைநடை மென்மேலும் சிறந்து விளங்கி மிகப் பெரிய அமைப்பாக மாறி இச்சமுதாயம் விழிப்படைய வழிவகுக்கட்டும். வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் ஆசிரியரே.

சிவமணி
வத்தலக்குண்டு

உழவின் திசை(Uzhavin Thisai) புத்தகத்தை அனைவரும் படித்துக் உண்மை நிலையை அறிந்து கொள்ள வேண்டும்..

விவசாய புத்தகங்கள்

 

Reviews

There are no reviews yet.


Be the first to review “உழவின் திசை – அ. முத்துக்கிருஷ்ணன்”

has been added to your cart:
Checkout