வாழும் மூதாதையர்கள் – தமிழகப் பழங்குடி மக்கள் – பகத்சிங்

-8%

வாழும் மூதாதையர்கள் – தமிழகப் பழங்குடி மக்கள் – பகத்சிங்

வாழும் மூதாதையர்கள்

வாழும் மூதாதையர்கள் – தமிழகப் பழங்குடி மக்கள் – பகத்சிங்

600.00 550.00

In stock

600.00 550.00

“மனிதர்களற்ற காடுகள் அல்லது காடுகள் காட்டு விலங்குகளுக்காவே ” என்ற குரலின் பின் இருக்கும் ஆபத்தை முகவுரையிலேயே விளக்கி வாழும் மூதாதையர்கள் புத்தகத்தை அறிமுகம் செய்கிறார் நூலாசிரியர்.

Publisher:
Author:

View cart

Description

வாழும் மூதாதையர்கள் புத்தகத்தை பற்றிய விமர்சனம்

இரண்டு முக்கிய முன்முடிவுகள் உடைபடுவதில் இருந்து “வாழும் மூதாதையர்கள்” நூல் தொடங்குகிறது.

“காட்டில் இருந்து அவர்களை சமதளத்தில் இறக்கி அவர்களை நாகரிகமயப்படுத்த வேண்டும்” என்ற குரலில் ஒரு அபத்தம் இருப்பது இப்புத்தகம் படிக்கையில் தெரிய வரும். அதே சமயம் “மனிதர்களற்ற காடுகள் அல்லது காடுகள் காட்டு விலங்குகளுக்காவே ” என்ற குரலின் பின் இருக்கும் ஆபத்தை முகவுரையிலேயே விளக்கி இப்புத்தகத்தை அறிமுகம் செய்கிறார் நூலாசிரியர்.

நூலாசிரியரின் இந்தக் கவலையே இப்புத்தகத்தில் தமிழக பழங்குடிகள் குறித்த ஒரு விரிந்த அறிமுகத்தை தமிழ் சமூகத்திற்கு செய்கிறது என புரிந்துகொள்ளலாம்.

பழங்குடிகள் குறித்த அறிவாக தமிழ் சமூகத்தில் என்ன இருக்கிறது?! பழங்குடிகள் அநாகரிகமாக சொன்னால் காட்டுமிராண்டிகள், நாகரிகமாக காட்டுவாசிகள் என்பதாக சொன்னாலும் அவர்கள் அறிவற்ற மூடர்கள், விதி வந்ததே வாழ்க்கை என வாழ்பவர்கள், சமதள மக்களிடம் பயந்து இருப்பவர்கள், ஆபத்தானவர்கள், நாகரிக வாழ்வு குறித்த எந்தவித நாட்டமும் இல்லாதவர்கள் என்பதாக இருப்பதாக கொள்ளலாம்.

இவை அத்தனையும் பொய் என்பதனையும் அவர்களும் முன்னேற்றம் காண விரும்புகிறார்கள் (எவர் தான் முன்னேற்றத்தை வெறுப்பவர்களாக இருப்பர்?) என்பதோடு அவர்களுக்கும் இயற்கையான மருத்துவ அறிவு, விலங்குகளுடனான உறவு, சூழல் குறித்த ஒரு நேசம் இருப்பதும் இப்புத்தகத்தில் இருந்து நீங்கள் அறியலாம்.

தோடர், பனியர், காட்டுநாயக்கன், குறும்பர் என தமிழகத்தின் எல்லா தொல்குடிகள் அல்லது பழங்குடிகள் குறித்த வரலாறு, வாழும் இடம், உண்ணும் உணவு, திருமண இறப்பு பிறப்பு சடங்கு என கலாச்சார பண்பாட்டு நடவடிக்கைகள் எல்லாமும் இந்தப் புத்தகத்தில் இடம் பெறுகிறது.

ஆசிரியர் இவர்களின் வாழிடம் தேடி சென்று பல நூறு கிலோமீட்டர்கள் ஏறி இறங்கி இந்நூலை படைத்திருக்கிறார். காலப்போக்கில் அசல் வாழிடங்களில் இருந்து பல்வேறு காரணங்களால் புறம் ஏகிய இவர்களின் வாழ்வில் நடைபெற்றுள்ள மாற்றங்கள் குறித்தும் பலவேறு செய்திகளை படைக்கிறார் நூலாசிரியர் அன்பு தோழர் பகத் சிங்.

அந்த மாற்றங்கள் பழங்குடிகளுக்கு தொல்குடிகளுக்கு உகந்தவையாக இருந்ததா அல்லது பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளதா என்ற கேள்விக்கு என்ன விடை இருக்க முடியும்?

1990 தொடங்கி இறுகி கெட்டிப்படுத்தப்பட்ட முதலாளித்துவம் இந்திய ஏழை எளிய மக்களின் வாழ்வை சூறையாடியுள்ளதை எவரும் அறியலாம்.

வாழும் மூதாதையர்கள்
வாழும் மூதாதையர்கள்

சமதளத்தில் வாழும் ஓரளவு பள்ளிக்கூட கல்வியறிவு பெற்ற , நலத்திட்டங்களின் பயனை ஒரளவுக்காவது அனுபவித்து வந்த மக்களுக்கே வாழ்வியல் நெருக்கடிகள் மிக அதிகமாக கூடியுள்ளது என்றால் இயற்கை வளங்கள் எல்லாம் கார்ப்பரேட் கொள்ளைக்கே என முடிவுக்கு வந்துவிட்ட உலகமய சூதாடிகள் பழங்குடிகளை மட்டும் என்ன விட்டு வைக்கவா போகிறார்கள்?

ஒரு பக்கம் காட்டு விலங்குகள் நாட்டுக்குள் வந்து மனிதர்களை தொந்தரவு செய்கிறது அதனால் காடுகள் விலங்குகளுக்கே என சொல்லி பழங்குடிகளை அவர்கள் வாழிடமான காடுகளில் இருந்து அப்புறப்படுத்துவதும் ஒரு சூது என்றே பார்க்க வேண்டும். மறு புறம் மனிதர்கள் விலங்குகளை வேட்டையாடுகிறார்கள் அதனால் காட்டு விலங்குகள் அருகி வருகிறது என்று காரணம் சொல்லி பாதுகாக்கப்பட்ட வரையறுக்கப்பட்ட வனப்பகுதி அல்லது புலிகள் சரணாலயம் என்பதாக பழங்குடிகள் காடுகளிலிருந்து விரட்டி அடிக்கப்படுவதும் நடந்து வருகிறது.

ஆனால் எஸ்டேட் என்ற பெயரில் தொடர்ந்து காடுகள் ஆக்கிரமப்படுத்தப்படுகிறது என்பதும் காட்டு வளங்கள் வளர்ச்சி என்ற பெயரில் முற்றாக சூறையாடப்படுவது தங்கு தடையின்றி நடைபெறுகிறது. சுமார் 2 இலட்சம் மரங்களை சுரங்கத்திற்காக வெட்டித்  தள்ள அதானி குழுமத்திற்கு எந்த தடையும் இல்லை என்பதோடு காடுகளை பாதுகாக்க முற்படும் பழங்குடிகள் அரசால் மிரட்டப்படுவது தொடர்கதையாகிறது.

இப்படியான சூழலில் பழங்குடிகள் குறித்த அறிவு என்பது மிகவும் அவசியமாகிறது. மனிதர்கள் என்ற குறைந்த பட்ச சிந்தை கூட இல்லாமல் சமூகம் இந்தப் புத்தகத்தை படித்தபின் கடக்க முடியாது.

நவீன சமூகம் அறிந்திராத பாரம்பரிய இயற்கை அறிவினை கொண்டவர்கள் பழங்குடிகள். அவர்களின் மருத்துவ அறிவு பிரமிக்கத்தக்கது.

அது போலவே, உணவுப் பழக்கமும், காட்டு விலங்குகளுடான உறவும், வேட்டைப் பழக்கமும் இவை யாவும் இப்புத்தகத்தில் அழகாக வந்து நம்மை அசத்துகிறது.

அது  போலவே நல்லெண்ணம் கொண்ட மக்கள் இந்தப் பழங்குடிகளின் அறிவினை வெகு சமூகத்துக்கு பயனளிக்கும் வகையிலும் அதே சமயம் பழங்குடிகளின் வாழ்வில் ஏற்றம் காணும் வகையில் உழைத்திருப்பதை இப்புத்தகத்தில் அறியலாம். ஆனால் இது எல்லா பழங்குடிகளின் வாழ்விலும் பிரதிபலித்துள்ளதா என்பதும் அவை போதுமானதா என்பதும் கேள்விக்குறியே. சாதி சான்றிதழ் கொடுப்பதில் கூட பெரும் பிரச்சனை நிலவுகிறது.

ஒரு டையரி போலத்தான் பழங்குடி மக்களின் வாழ்வும் பதியப்பட்டிருக்கிறது என்றாலும் சில ஆய்வுகளை நோக்கிய கேள்விகளை விட்டே செல்கிறது இந்நூல். மணப்பெண்ணிற்கு மணமகன் கொடுக்கும் மனநிச்சய தொகை என்பது அநேக இன மக்களின் பண்பாட்டில் 5இனி மடங்காகவே இருக்கிறது? அநேகமாக பல பழங்குடிகளின் கலாச்சாரத்தில் பூப்படைந்த பெண்ணிற்கு ஏழு நீர் கொண்டே தீட்டு கழிக்கப்படுவது எதனால்? இது போன்றவை இன்னும் நிறைய இருக்கின்றன.

திருமணங்கள் பெரும்பாலும் விருப்பப்படியும் அதே சமயம் திருமண விலக்கும் கூட விருப்பப்படியும் இசைவுடனே நடக்கின்றன என்பதும் சிறப்பு செய்திகள். திருமணமான பின் பெரும்பாலான இனங்களில் தனிக்குடித்தனமே வைக்கிறார்கள்.

எந்தவித ஆபத்தும் இன்றி இருந்தால் இந்தப் பழங்குடிகள் வாழ்வு வயது என்பது சராசரிக்கும் அதிகமாகவே இருக்கும் என தெரிகிறது.

அமெரிக்கா என்னும் வள தேசத்தின் பின்னே பூர்வ பழங்குடிகளின் ரத்த ஆறும் ஓடுகிறது என்று சொல்வார்கள். பூர்வகுடிகளின் எழுச்சி என்பது சமீபத்தில் பொலிவியா நாட்டில் நடந்தேறியது.

மார்க் சியராக தன்னை அறிவித்துக் கொண்டு பொலிவியாவின் தலைமைப் பீடத்தில் உயர்ந்தவர் எவா மொரேல்ஸ். அவர் ஒரு பழங்குடி இனத்தவரே. சமீபத்தில் ஆஸ்திரேலியாவில், நியுசிலாந்தில் பழங்குடி இன அபோரிஜின் மக்கள் பேரணி சென்றதையும் சில நாடுகளில் அவர்களுக்கான தினங்கள் கொண்டாடப்படுவதையும் நாம் செய்திகளாக படித்திருக்கிறோம்.

தமிழக பழங்குடி இன மக்களின் வாழ்வில் முன்னேற்றங்களை நிச்சயமாக எதிர்பார்க்கிறோம் நாம். ஆனால், அவற்றை அந்த பழங்குடி இன மக்களின் சம்மதத்தோடு (வலிந்து பெறப்பட்டது அல்ல) அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு அமையட்டும் என்பதையே இந்நூலாசிரியர்  வலியுறுத்துகிறார்.

இறுதியாய், சொல்லவிட மறந்து போகக் கூடாத ஒன்று. தமிழ்ப் பதிப்பு உலகில் வழவழ தாளில் பல வண்ண புகைப்படங்களோடு ஒரு புத்தகம் என்பது மிக சமீபத்தில் இது ஒன்றே. அதற்காகவே உயிர் பதிப்பகத்தாரை நிச்சயம் பாராட்டலாம்.

ஒளிப்படம் பிடித்த அத்தனை பேரும் சிறப்பு பாராட்டுக்குரியவர்கள். முள் கீரீடம் (தலித் ஊராட்சி மன்ற தலைவர்களின் நிலை) என்னும் புலம் வெளியீட்டினை தொடர்ந்து தோழர் பகத் சிங் அவர்களின் அடுத்த புத்தகம் இது. வாழும் மூதாதையர்கள் – தமிழக பழங்குடி மக்கள் என்னும் நூல் நிச்சயம் வாசிக்கத்தக்க ஒன்று.

பழங்குடிகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய நூல் வாழும் மூதாதையர்கள் ஆகும்.

காடுகள் தொடர்பான புத்தகங்கள்

 

Reviews

There are no reviews yet.


Be the first to review “வாழும் மூதாதையர்கள் – தமிழகப் பழங்குடி மக்கள் – பகத்சிங்”

has been added to your cart:
Checkout