வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பாகம் 1

-13%

வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பாகம் 1

வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பாகம் 1

வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பாகம் 1

400.00 350.00

In stock

400.00 350.00

வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் காடுகளை நடந்து கடந்த மனிதர். விலங்கு,பறவை, மரங்கள் சூழ் பகுதியில்  முடிந்த வீரப்பன் வாழ்க்கை.
Publisher:
Author:

Description

வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் நூல் பற்றிய குறிப்புகள்

1998 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பர்துவான் பல்கலைக்கழகத்தில் ஒரு மாத கால பணியிடை பயிற்சி. வடகிழக்கு மாநிலங்களில் உள்ள சில பேராசிரியர்களும் அதில் கலந்து கொண்டார்கள். அவர்கள் மத்தியில், தமிழ் நாட்டைச் இருவர் மட்டுமே பிரபலமாக அறியப்பட்டு இருந்தனர். ஒருவர் ஜெயலலிதா மற்றொருவர் வீரப்பன். அஸ்ஸாம், மணிப்பூர், நாகாலாந்து வரை மட்டுமல்ல, பன்னாட்டு அளவிலும், வீரப்பன் நன்கு அறியப்பட்டே இருந்தார்.

வீரப்பனால், அச்சமும் பீதியும் நிறைந்த காலம் ஒன்று இருந்தது. அதனால் அவனைப் பற்றிய வீர தீரக் கதைகளும் சேர்ந்தே எழுந்து இருந்தது. எது உண்மை? எது பொய்? யாருக்கும் தெரியாது. வனத்துறை, காவல் துறையை சார்ந்தவர்களுக்கு இந்த அச்சமும் பீதியும் திகிலூட்டியது.

கோபம் வெறுப்பு கலந்தும் இருந்தது. 2004 ஆம் ஆண்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ” மலைப்புற அறிவியல் விழிப்புணர்வு கலைப் பயணம்” என்ற ஒன்றை நடத்தியது. இது மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறை உதவியோடு நடத்தப்பட்டது. இந்தக் கலைக் குழு, மலைக்குள் செல்ல அதிரடிப்படை மற்றும் ஈரோடு மாவட்ட காவல் துறை ஆகிய இரண்டும் இரண்டு வாகனங்களில், இருபது ஆயுதம் தாங்கிய போலீசாரோடு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

சிறுநீர் கழிக்கக் கூட இரண்டு ஆயுதம் தாங்கிய போலீசார் உடன் வந்தனர். இதன் விளைவாக, பொது மக்கள் கண்டுகளிக்க வேண்டிய கலைநிகழ்ச்சிகளை அதிரடிப்படை காவலர்கள் மட்டுமே பார்க்கும் அவலம் ஏற்பட்டது.

வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பாகம் 1
வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பாகம் 1

வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் நூலின் உருவாக்கமும் சிக்கல்களும்

இந்தக் குறையை போக்கியது மட்டுமல்ல, வீரப்பனின் முழு உண்மை வரலாற்றையும் தமிழ் சமூகத்திற்கு படைத்து அளிக்கும் பணியை பத்திரிக்கையாளர் பெ. சிவசுப்பிரமணியம் மேற்கொண்டுள்ளார்.

தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் வாழும் மக்கள், காவல் துறை, வனத்துறை, மத்திய மாநில அரசுகள் ஆகிய எல்லோருக்கும் உண்மையில் இது ஒரு பாடப்புத்தகம். வனம், வன உயிரிகள் உள்ளிட்ட இயற்கை வளங்கள், பாதுகாப்பு, அதன் மேலாண்மை போன்ற விசயங்களில் தக்க விழிப்புணர்வு கல்வியை இப்புத்தகம் கொடுத்துள்ளது என்றால் அது மிகையல்ல.

“வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும்” என்ற இந்த நூலின் ஆசிரியர் சிவசுப்பிரமணியம், இவ்வளவு காத்திரமாக, இந்தப் படைப்பை உருவாக்க என்ன காரணம்? ஒரு பத்திரிகையாளராக யாரும் செய்யத் துணியாத இந்த பணியை செய்ய வேண்டும் என்ற துணிவும், நேர்மையும், என்ன விலை கொடுத்தேனும் வெளி உலகிற்கு இந்த விசயத்தை சொல்லியே ஆக வேண்டும் என்ற பத்திரிகை அறம் சார்ந்த அற்பணிப்பு உணர்வுமே காரணம். அந்த அற்பணிப்பு உணர்வுக்காக அவர் கொடுத்த விலை மிக மிக அதிகம்.

இதைவிடவும் மோசமான சிக்கல்கள் சவால்கள் அடக்குமுறைகளை சந்தித்து தான் எதிர்கால சக பத்திரிகையாளர்கள் சமூகத்திற்கு பங்களிக்க வேண்டும் என்பதற்காக இவர் வாழ்ந்து காட்டி உள்ளார் என்றும் கூறலாம்.

கொலை, கொலை முயற்சி, கொள்ளை, கூட்டுக் கொள்ளை, வழிப்பறி, ஆள் கடத்தல், ஆயுதக் கடத்தல் என்று எட்டு கடுமையான பொய் வழக்குகளை இதன் நிமித்தம் அவர் சந்திக்கிறார். 

ஊடகத் துறையில் பணிபுரிவோருக்கு பாதுகாப்பாக இருக்கும் சட்டங்கள் கூட பயன்படாத அளவுக்கு கிரிமினல் வழக்குகள் அவர் மீது புனையப்படுகிறது. இந்த எட்டு வழக்குகள், கொள்ளேகால், சாம்ராஜ்நகர், மைசூர், கோவை, கோபி என பல நீதிமன்றங்களில் நடைபெற்றது. இந்த வழக்குகள் காரணமாக அவரது வாலிப வயது முழுவதும் (32 வயது முதல் 42 வயது வரை) நாசமடைகிறது. வழக்குகளில் ஆஜராக, வாய்தா பெற என்று பத்தாண்டுகள் கழிந்து விடுகிறது.

இதற்காக, இவர் 4,85,000 கிலோமீட்டர் இரவு பகலாக பயணம் செய்து உள்ளார். 1993 ஆம் ஆண்டு முதல் 2000 வரை, பல்வேறு காலகட்டங்களில் வீரப்பனை சந்தித்து பேட்டி எடுத்து வெளி உலகிற்கு சொன்னது இவரது மிக முக்கிய பங்களிப்பு.

இப்போது இவர் “வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும்” நூலை எழுதி வெளியிட்டுள்ளார். இதனைப் படிக்கும் போது, வீரப்பன் வரலாற்றை நூலாகக் கொண்டு வர, நூலாசிரியர் சிவசுப்பிரமணியம் எடுத்த முயற்சிகள் தெரிகிறது. சுமார் 1000 பேரை இதற்காக சந்தித்து உரையாடி உள்ளார்.

அந்த வனம் முழுவதும் குறுக்கும் நெடுக்குமாக அலைந்து திரிந்து உள்ளார். நம்மையும் கூட அவரோடு பயணிக்க வைக்கிறார். வீரப்பன் வரலாற்றில் தொடர்புடைய பல மனிதர்களின் அரிய புகைப்படங்கள், சம்பவங்கள் நடந்த இடங்கள் எனத் தேடிச் சேர்த்துள்ளார். வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றை உயிர் துடிப்பான நடையில் கொண்டு செல்வதில் வெற்றி கண்டுள்ளார்.

நூலைக் கையில் எடுத்தவர் எவரும், படித்து முடிக்காமல் கீழே வைக்க முடியாத விறுவிறுப்பான நடை, உட்கரு. அற்புதமான புனைவு இலக்கியவாதிகள், மிகச் சிறந்த துப்பறியும் கதாசிரியர்கள் என யாராலும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத உள்ளடக்கம். திருப்பங்கள்…

சம்பவங்கள்… இவை திகிலூட்டுகிறது. மனதை படபடக்க செய்கிறது. இதயத்தை வலிக்கச் செய்கிறது. கண்ணீரையும் வர வரவழைக்கிறது. பலவிதமான எண்ணங்களை உருவாக்குகிறது. அந்தக் காட்டை விட்டு வெளியே வர மனம் மறுக்கிறது.

வீரப்பன் வரலாற்றின் முதல் பகுதி, நமக்கு என்ன சொல்கிறது? மேட்டூர் அணை கட்ட அங்கிருந்து வெளியேற்றப்பட்ட வீரப்பன் உள்ளிட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைத்திருந்தால் இந்த அவலச் சுவை மிகுந்த வரலாறு உருவாகாமல் தடுக்கப் பட்டிருக்குமோ? வனத்தில் வாழும் மக்களுக்கு, அவர் தம் வயிற்றுப் பாட்டிற்கு உத்தரவாதம் உறுதி செய்யப்பட்டிருந்தால் மதிப்பிடவே முடியாத யானைத் தந்தம், சந்தன மரங்கள் உள்ளிட்ட செல்வங்கள் கொள்ளை போனது தடுக்கப் பட்டிருக்குமோ? வனத்தையும் சட்டம் ஒழுங்கையும் பாதுகாக்க வேண்டிய துறைகளின் ஊழியர்கள், அத்தி பூத்தது போல வெகு சிலரே அத்துறையின் நோக்கங்களுக்கு ஏற்றவர்களாக இருக்கிறார்கள். அது தான் இந்த அவலத்திற்கு காரணமா?

வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பாகம் 2

வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பாகம் 3

Reviews

There are no reviews yet.


Be the first to review “வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பாகம் 1”

has been added to your cart:
Checkout