யானைகளின் வருகை நூல் குறித்து
சிறியதொரு கோவை காட்டில் பேருயிரின் அழிவு இவ்வளவு என்றால் பூமியெங்கும் உள்ள பெருங்காடுகளில் எத்தனை அழிவுகளை சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த யானைகள்? உங்கள் உள்ளத்தின் அடியாழத்தில் அமிழ்ந்து கிடக்கும் சூழலியல் உணர்வுகளை மீட்டெடுக்கும் நூல். கதை போல, கவிதை போல, க்ரைம் த்ரில்லர் போல விறு விறுப்பாக வாசிக்க வைக்கும் யானைகளின் கண்ணீர் கதைகள்.
அன்று யானை தாக்கியதால் பலத்த காயமுற்று ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்ட விவசாயி ராசு முதலில் பிழைப்பதே கடினம் என்றார்கள். கால், கை, முதுகு, பாதம் என ஆறு இடங்களுக்கு மேல் எலும்புகள் முறிந்திருந்தன. குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒவ்வொன்றாக ஆப்ரேஷன் செய்ய வேண்டும். எப்படியும் படுக்கையிலிருந்து மீள ஆறு மாதங்களுக்கு மேல் ஆகும் என்றார்கள். அப்படியே உயிர் மீண்டாலும் பழையபடி நடக்கவே முடியாது என்று பேசிக் கொண்டார்கள். எது எப்படியோ சில மாதங்களில் அவர் மீண்டு வந்து விட்டார். வழக்கம்போல் தோட்டத்துக்கு அருகில் உள்ள பண்ணை வீட்டிற்கு வந்து போவதை இப்போதும் பார்க்கிறேன். அவர் ஆஸ்பத்திரியில் இருந்த நேரத்தில் அதே காலை விந்தி விந்தி நடக்கும் கொம்பன் (கட்டையன்) சிலரை அடித்துக் கொன்று விட்டதாக விவசாயிகளிடம் புகார்கள் கிளம்பின.
Reviews
There are no reviews yet.