அறத்தின் குரல் -சாவித்தரி கண்ணன்

அறத்தின் குரல் -சாவித்தரி கண்ணன்

அறத்தின் குரல்

அறத்தின் குரல் -சாவித்தரி கண்ணன்

150.00

In stock

150.00

அறத்தின் குரல் ஒவ்வொரு சாமினியனின் குரலாக ஒலிக்கிறது..
Publisher:


Description

அறத்தின் குரல் நூல் குறித்து

முப்பத்தைந்து ஆண்டுகால பத்திரிகையுலக பயணத்தில் முழுமையான சுதந்திரமுள்ள பத்திரிகையாளனாகவே எங்கிருந்தாலும் நான் வெளிப்பட்டுள்ளேன். அந்த சுதந்திரத்திற்கு பாதிப்பு எனில் வெளியேறிவிடுவேன் அல்லது என்னை விலக்கிக் கொள்வேன்! எந்த நிறுவனத்தின் அடையாளமாகவும் இயங்க விரும்பாதவனாகவே இயங்கினேன். ஆயினும் வேறொரு இடத்தில் நம் சுதந்திரம் என்பது வரையறுக்கப்பட்டது தானே!

முகநூலுக்குள் இயங்கத் தொடங்கியது முதல் முழு சுதந்திர வேகத்தில் இயங்கினேன் என்றாலும், முன்னைக் காட்டிலும் சுயக் கட்டுப்பாட்டை அதிகப்படுத்திக் கொண்டேன்! இங்கே பின்னூட்டம் எழுதுகிற ஒவ்வொரு வாசகனும் நீதிபதியாக என்னைக் கண்காணிப்பதாக உணர்கிறேன்.

பல்லாயிரக்கணக்கான வாசகர் தளத்தை முகநூல் பெற்றுத் தந்த தைரியத்தில் உருவானது தான் அறம் இணைய இதழ். இது ஒரு செய்தி பத்திரிகையல்ல! தற்போதைய நாளிதழ்கள் சமகாலச் செய்திகள் பலவற்றை மறைத்தும், உண்மையை ஊனமாக்கி திரித்தும் வெளியிடுகிற சூழலில் அறப் பார்வையோடு இவற்றை அணுக வேண்டிய தேவைக்காக மலர்ந்ததே அறம்! இதில் ஒவ்வொரு நாளும் வெளியாகும் செய்தி கட்டுரைகள் உடனுக்குடன் பல்லாயிரம் வாசகர்களால் விரும்பி வாசிக்கப்பட்டு வருகின்றன!

www.aramonline.in என்ற இணைய தளம் அறம் சார்ந்த பெருவாசகர் பரப்பை தன்னகத்தே கொண்டு, விரிந்து, பரந்து, கிளை பரப்பி வருகிறது. அறம் இணைய இதழை சிறப்பாக வடிவமைத்து, தொழில் நுட்ப ரீதியாக வலுப்படுத்தி கொடுத்தவர் அன்புத் தம்பி கவின் என்பதை பெருமையாக சொல்லிக் கொள்கிறேன்.

காலத்தின் தேவையாக வெளி வந்து கொண்டிருக்கும் அறம் கட்டணமில்லா இதழாக அறியப்பட்ட போதிலும், அதை கைகோர்த்து அரவணைத்து அணைந்துவிடாமல் காப்பாற்றுவது தங்கள் சமூகக் கடமை என உணர்ந்த உன்னத வாசகர்கள் பலத்தில் மட்டுமே வந்து கொண்டுள்ளது.

தங்களன்புள்ள
சாவித்திரி கண்ணன்

Reviews

There are no reviews yet.


Be the first to review “அறத்தின் குரல் -சாவித்தரி கண்ணன்”

has been added to your cart:
Checkout