உயிர் இனிது-கோவை சதாசிவம்
₹150.00
உயிர் இனிது நூல் மற்ற உயிரினங்களை குறித்து விரிவாக விவரிக்கிறது!
- Description
- Reviews (0)
Description
உயிர் இனிது’ நூலை சார்லஸ் டார்வினுக்கு சமர்ப்பணம் செய்துள்ளார் நூலாசிரியர். சிந்தித்தால் பேசலாம்! நெகிழ்ந்து, நெகிழ்ந்து, நெகிழ்ந்தால் தான் எழுத முடியும் – அறிஞர் அண்ணாவின் கூற்றுக்கிணங்க பொதிகை தொலைக்காட்சியில் ‘வையகமே வானகமே’ நிகழ்ச்சியில் ஆசிரியர் பேசியது எழுத்தாகி உயிர் இனிது நூலாகியுள்ளது.
மலர்கள், மரங்கள், பறவைகள், ஊர்வன, ஊனுண்ணிகள், விலங்குகள், பூமியின் வரலாறு, நிலம், நீர், காற்று, இயற்கை வேளாண்மை, உயிர்க் கடிகாரம் என அனைத்தையும் அலசி, ஆராய்ந்து, பல்வேறு அரிய பொக்கிசங்களை எளிதாகப் புரியும் வண்ணம் நமக்களித்துள்ளார். பழங்குடிகளின் அன்பின் அடையாளமாக, நற்காலத்தின் விதையாகப் பூக்கும் குறிஞ்சி மலர்கள் அழிவின் விளிம்பிலுள்ளதை கோடிட்டுக் காட்டி குறிஞ்சி மரபணு வங்கி உருவாகக் குரல் கொடுத்துள்ளார்.
Reviews
There are no reviews yet.