” பகுத்தறிவு பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்டதினாலே “என்பார் திரையிசையில் கவிஞர் வாலி. கேள்விகள் கேட்டு, பதில்களைத்தேடும் சமூகமே விதைகளைப்போல் விழுந்து, மரங்களைப்போல் எழுகின்றன ..!
கேள்வி கேட்பதும், அவற்றுக்கு பதிலுரைப்பதும் ஒரு மகத்தான கலை! உலகில் மறைக்கப்பட்ட , மறக்கப்பட்ட செய்திகளை ஞாபகப்படுத்துவது கேள்விகள்தான்! கேள்விகளால் மனதிலுள்ள ஐயங்கள் தெளியும்! தேங்கிக்கிடக்கும் நீரை புது வெள்ளம் அடித்துக்கொண்டு போவதைப்போல, தேடல் கொண்ட மனிதர்களை அடுத்த இலக்கை நோக்கி ஓர் அங்குலமேனும் நகர்த்தும் வல்லமை கொண்டது கேள்விகள்!
” பறவையின் எச்சத்தில் பூக்குமொரு காடு ” நேர்காணல் நூலின் கேள்விகளும், பதில்களும் எல்லா திசைகளிலும் வெளிச்சம் போல் பரவியிருக்கின்றன! காற்றைப்போல் நிரம்பியிருக்கின்றன!
Reviews
There are no reviews yet.