வட்டமிடும் கழுகு நூலைப் பற்றிய குறிப்பு
உலகத்தையெல்லாம் நம்முடன் ஒப்பீடு செய்யவிடாமல் மறைத்துக்கொண்ட ஏகாதிபத்தியம்,
உலகமயமாக்கம், இந்தியத்துவம் என்று அரசியல்வாதிகள் முழங்குவது பெரும் சூழ்ச்சியே.
இதன்போக்கில் பொதுமக்களின் நிலை என்ன?
எச்சில் துப்புவதும், தீ புகை மூட்டுவதும், சாதி பேசுவதும் எப்போது நிற்கும்?
அவர்கள் எப்போது இயற்கைப் பேரிடர்களை ரசிப்பது?
என்று வரலாற்றைப் புரிந்து காட்டைக் காப்பாற்றுவது?
எப்போது காட்டை பூட்டாமல் விட்டு காட்டுயிர்களை நேசிப்பது?
அய்யகோ, இவையெல்லாம் நடக்க 200 கோடி ஆண்டுகளாகும் போலிருக்கிறதே,
இடையில் காடுகள் அழிந்து,
ஊர்ப்புறம் ஒழிந்து இயற்கை சமன்பாடு குலைந்தாலும்,
ஏதோ நம்மால் ஆனதைச் செய்து கொண்டே இருப்பதுதான் ஒரே ஆறுதல்.
அதன் ஒரு சிறு பகுதியே ‘வட்டமிடும் கழுகு’ எனும் இந்நூல்.
“பிழைக்கத் தெரியாதவர்கள்” கேட்கிறோம்: மனசாட்சி உள்ளவர்களே இயற்கைக்கு அல்லது இயல்புக்கு மாறுங்கள்.
Reviews
There are no reviews yet.