வேளிர் வரலாறு நூல் பற்றி
சங்க இலக்கியத்தையும் தொல்லியலையும் இணைத்து ஆராயும்போது, அந்த ஆய்வு கூடுதல் நம்பிக்கைக்கு உரியதாக மாறுகிறது.
அவ்வகையில், கல்வெட்டு மற்றும் தொல்லியல் துறையில் 29 ஆண்டுகள் பணியாற்றிய அறிஞர் ர.பூங்குன்றன் எழுதியுள்ள ‘வேளிர் வரலாறு’ ஆய்வு நூல் முக்கியத்துவம் பெறுகிறது.
சங்க இலக்கியங்களும் கல்வெட்டுகளும் ‘வேளிர் வரலாறு’ எழுதுவதற்குத் தரவுகளை அளித்திருக்கின்றன.
இவர் ஏற்கெனவே ‘தொல்குடி வேளிர் வேந்தர்’ என்ற ஆய்வு நூலையும் வெளியிட்டுள்ளார்.
தொடர்ச்சியாக சங்க காலத் தொல்குடிகள் குறித்த ஆய்வுகளை ர.பூங்குன்றன் செய்துவருகிறார்.
சங்க காலச் சமூக ஆய்வுகள் பெரும்பாலும் பெருவேந்தர்கள் சார்ந்தே அமைகின்றன.
அதே காலத்தில் வாழ்ந்த தொல்குடிகளான பாணர்கள், வேளிர்கள், மறவர்கள், மழவர்கள், இளையர்கள், எயினர்கள் உள்ளிட்டோர் குறித்த மீள் வரலாற்று ஆய்வுகள் சமீப காலமாகவே நடைபெறுகின்றன.
மு.ராகவையங்கார் ‘வேளிர் வரலாறு’ (1913) என்ற ஆய்வு நூலை எழுதியுள்ளார்.
நூற்றாண்டுகளைக் கடந்து அதே பெயரில் ஓர் ஆய்வை நிகழ்த்த வேண்டிய தேவை மீண்டும் உருவாகியிருக்கிறது.
மு.ரா.வின் ஆய்வில் சில குறைகள் இருப்பதை ர.பூங்குன்றன் சுட்டிக்காட்டுகிறார்.




Reviews
There are no reviews yet.