ஆகுபா குறித்து
ஆ…கு…பா… ஆந்தைகள், குரங்குகள், பாம்புகள்… இவற்றின் முதல் எழுத்து! அலறல்… அலப்பல்… சீறல் ஒலி எழுப்பும் உயிரினங்களைத் தேடி!
சூழல் சார்ந்து வெளியாகும் எனது மூன்றாவது நூல் என்பதில் மகிழ்ச்சி!
கடந்த ஐந்து வருட பயணங்களில் ஆந்தைகள், குரங்குகள் மற்றும் பாம்புகளோடு கிடைத்த அனுபவக் கோவை இது! காடுகளில் மகிழ்ந்து திரிந்த போது எதிர்பாராமல் தென்பட்ட ஆ.கு.பா.களை படம் பிடித்த மற்றும் பின் தொடர்ந்த அனுபவங்களை இந்நூலில் காணலாம்.
எனது நூல்களுக்கு வித்தியாசமான பெயர்களைச் சூட்டும் திரு.மகேஷ்வரன் அவர்களுக்கு அன்பும் நன்றியும்!…
நூலுக்கு அணிந்துரை எழுதியிருக்கும் எனது அன்பிற்கினிய ஆசிரியர் மரு.மு.வீ.மகாதேவன், இணை பேராசிரியர், தேசிய சித்த மருத்துவ நிறுவனம் அவர்களுக்கும், திரு.க.பாரதிதாசன், செயலர், அருளகம் மற்றும் உறுப்பினர், தமிழ்நாடு அரசு காட்டுயிர் வாரியம் அவர்களுக்கும்… திரு.மா.ரமேஸ்வரன், ஊர்வன ஆராய்ச்சியாளர் அவர்களுக்கும் நன்றிகள் பல!…
Reviews
There are no reviews yet.