உங்கள் வாழ்வில் வேதியியல் நூல் குறித்து
போரானுக்கும் கணினிக்கும் ஏதாவது தொடர்பு இருக்கா?
இல்ல. ஆனா, போரானுக்கும் சிலிக்கானுக்கும் தொடர்பு இருக்கு.
அது என்ன?
உலோகப்போலிகளில் இரண்டாவது அதிக உருகுநிலை, கொதிநிலையைக் கொண்டது சிலிக்கான்.
அதைத்தான் ஏற்கெனவே நீ சொல்லிட்டியே
உலோகப்போலிகளில் அதிக உருகுநிலை, கொதிநிலையைக் கொண்டது போரான். அப்புறம் அது இல்லேன்னா, துணிகளும் தாவரங்களும் ரொம்பக் கஷ்டப்படும்.
ஏன்?
ஏன்னா சலவைத் தூள், சோப்புகளில் போரான் சேர்க்கப்படுது.
ஓஹோ, அப்ப தாவரங்கள்?
தாவர வளர்ச்சிக்குத் தேவையான அவசிய ஊட்டச்சத்து இது. தாவரங்களின் செல் சுவரை போரான் வலுப்படுத்துது. அதனால போரானை அடிப்படையா கொண்ட போராக்ஸும் போரிக் அமிலமும் உரங்களில் சேர்க்கப்படுகின்றன.
ஓ! போரான் பயிரை வளர்க்குதா.
Reviews
There are no reviews yet.