சோழநாட்டு நடுகற்கள் நூல் பற்றி
சோழநாட்டு நடுகற்கள் (முன்னு பெரும் முன்னோர் மரபு) என்னும் நூல் திருச்சிராப்பள்ளி மாவட்ட நடுகற்கள் மற்றும் தொல்லியல் சின்னங்கள்,
பெரம்பலூர் – அரியலூர் மாவட்ட நடுகற்கள், தஞ்சாவூர் – திருவாரூர் – நாகப்பட்டினம் – கடலூர் – மயிலாடுதுறை மாவட்ட நடுகற்கள்,
கரூர் – புதுக்கோட்டை எல்லைப்பகுதி நடுகற்கள், சேலம் – நாமக்கல் எல்லைப்பகுதி நடுகற்கள் என்னும் உட்தலைப்புகளையும், உரிய ஒளிப்படங்களையும் கொண்டு அமைந்துள்ளது.
நடுகற்கள் அமைந்துள்ள இடம், அவ்விடத்தின் சிறப்பு, நடுகற்களின் காலம், உருவ அமைப்பு ஆகியவற்றை இலக்கியச் சான்றுகள்,
புராண வரலாற்றுச்செய்திகள், கல்வெட்டு அறிக்கைகள், முந்தைய ஆய்வாளர்களின் கண்டுபிடிப்புகள், நூலாசிரியரால் கண்டுபிடிக்கப்பட்டவை, கண்டுபிடிப்பு பற்றிய நாளிதழ் நறுக்குகள் என்ற வகையில் தெளிவான புரிதலுடன் ஒவ்வொரு நடுகற்களைப் பற்றியும் விரிவாக எடுத்துரைப்பதோடு,
மேற்கோள் காட்டல், தகவலாளர்களுக்கு நன்றி கூறல் போன்ற நெறிமுறைகளையும் நூலாசிரியர் கடைபிடித்துள்ளார்.
கிடைக்காத சிற்பத்திற்கு அதன் மைப்படியை வைத்து விவாதிக்கிறார்.
நடுகல்லின் தோற்றுவாய், சோழநாட்டு நடுகற்கள் மரபு என்ற தலைப்புகளில் நூலுக்கான பின்புலத்தை ஆராய்கிறார்.



Reviews
There are no reviews yet.