எனைத் தேடி வந்த சிற்றுயிர்கள் -ஆதி வள்ளியப்பன்

எனைத் தேடி வந்த சிற்றுயிர்கள் -ஆதி வள்ளியப்பன்

enai-thedi-vantha-sitruyirgal_ஆதி வள்ளியப்பன்

எனைத் தேடி வந்த சிற்றுயிர்கள் -ஆதி வள்ளியப்பன்

180.00

In stock

180.00

(Free Shipping Above 500)

Publisher:
Author:

Description

ஆதி வள்ளியப்பன்

சென்னையின் நெருக்கடியான பகுதியொன்றில் இருக்கும் என் வீட்டைச் சுற்றிலும் பல தாவரங்கள், பூச்சிகள், பறவைகளை நாள்தோறும் பார்த்து ரசித்துக்கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு வாரமும் ஏதோவொரு புது உயிர் ஆச்சரியப்படுத்தும்.

சில நேரம் வழக்கமாகப் பார்க்கக்கூடிய பூச்சியோ பறவையோகூட அரிய காட்சி அனுபவம் ஒன்றைத் தந்து செல்லும். பல நேரம் நாம் கவனிக்கத் தவறும் சிறிய பூச்சிகளுடைய உலகின் சில சாளரங்களைத் திறக்க முயல்கிறது இந்த நூல்.

Reviews

There are no reviews yet.


Be the first to review “எனைத் தேடி வந்த சிற்றுயிர்கள் -ஆதி வள்ளியப்பன்”

காட்டுயிர் என்றால் காடுகளில் மட்டுமே வசிக்கும் உயிரினம் என்று அர்த்தமாகாது. நாம் வசிக்கும் வீடுகூட பல்லிக்கும், சிலந்திக்கும் உகந்த வாழிடமாகிறது. இயற்கையான சூழலில், வளர்ப்பு உயிரினங்கள் அல்லாத எல்லா உயிரினங்களுமே காட்டுயிர்கள் தான். பறவைகள், பாலுட்டிகள், ஊர்வனங்கள், இருவாழ்விகள் யாவும்,  எப்போதுமே அவற்றின் அழகாலும், கண்கவரும் வண்ணங்களாலும், விசித்திரமான குணாதிசயங்களாலும், உருவில் பெரியதாக இருப்பதாலும் நம்மை எளிதில் கவர்ந்துவிடும். இது போன்ற பேருயிர்கள் இயல்பாகவே நம் கவனத்தை ஈர்த்துவிடுகின்றன.

புலி, யானை, பாடும் பறவைகள், கழுகு வகைகள், பாம்புகள், வண்ணத்துப்பூச்சிகள் போன்ற வசீகரமான உயிரினங்களுக்கு கிடைக்கும் கவனம் பல சிற்றுயிர்களுக்குக் கிடைப்பதில்லை. எனினும் மேற்சொன்ன உயிரினங்களுக்கு எந்தவிதத்திலும் குறையாத எண்ணிலடங்கா பல சிறிய உயிரினங்கள் நம்மைச் சுற்றி இருக்கத்தான் செய்கின்றன. ஏனைய உயிரினகளைப் போல் அவையும் இந்த இயற்கைச் சூழலில் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை மகரந்தச்சேர்க்கை முதல் மட்கச்செய்வது வரை பல வகையில் இந்த பூமியின் செயல்பாட்டிற்கு பேருதவி புரிகின்றன. இது போன்ற அதிகம் கண்டுகொள்ளப்படாத சிற்றுயிர்களைப் பற்றிய ஒரு அருமையான நூல் இது. இயற்கையை அவதானிக்க நாம் வெகுதொலைவு செல்லவேண்டியதில்லை. நாம் அமர்ந்திருக்கும் இடத்தைச் சுற்றிப் முதலில் பார்க்கத் தொடங்கினாலே போதும். அதைத்தான் இந்த நூலாசிரியர் ஆதி வள்ளியப்பன் செய்திருக்கிறார். அவரது வீட்டினருகே அதுவும் நகரப்பகுதியில் தென்பட்ட பூச்சிகளையும் ஏனைய சிற்றுயிர்களையும் பதிவு செய்து அவற்றை இந்த நூலில் நமக்கு அறிமுகம் செய்கிறார்.

இது போன்ற சிற்றுயிர்களை கவனத்துடன் அவதானித்து அவற்றை படமும் பிடித்துள்ளார். விலையுயர்ந்த காமிராவோ, மேக்ரோ லென்சாலோ அல்ல. படங்கள் அனைத்தும் கைபெசி காமிரா! இந்த உயிரினங்களை அடையாளம் காண்பதென்பது சற்றே சவாலான வேலைதான். இதற்காக India biodiversity Portal – https://indiabiodiversity.org/, iNaturalist – https://www.inaturalist.org/ போன்ற மக்கள் அறிவியல் திட்டங்களில் இணைந்து அங்குள்ளவர்களின் உதவியுடன் பல உயிரினங்களை அடையாளம் கண்டுள்ளார். நாம் எடுக்கும் காட்டுயிரினங்களின் படங்களை நாமே வைத்துக்கொண்டிருப்பதால் பெரிய பயன் ஏதும் இருக்கப்போவதில்லை. இது போல், மக்கள் அறிவியல் திட்டங்களுக்கு பங்களிப்பதன் மூலம் பல உயிரினங்களைப் பற்றித் தெரிந்து கொள்வதோடு, அல்லாமல், அறிவியல் ஆராய்ச்சிக்கும் உதவும்.

நாம் கால்களில் மிதிபடக்கூடிய, விளக்கு வெளிச்சத்தில் வீட்டுக்குள் வந்து வெளியேற முடியாமல் தவிகின்ற, நம் கண்களுக்கு அருவருக்கத்தக்கதாகத் தெரிகின்ற, நம்மை பயப்பட வைக்கின்ற, நாம் வெறுத்து ஒதுக்குகின்ற எண்ணிலடங்கா சிறிய உயிரினங்களை எதிர்மறையான எண்ணங்கள் இல்லாமல் சற்று நேரம் உற்று நோக்கினால் நம் முன் ஒரு புதிய உலகம் தெரிய ஆரம்பிக்கும். அதற்கு இந்த நூல் பெரிதும் உதவும்.

has been added to your cart:
Checkout