காட்டின் கதைகள் நூலில் இருந்து
வட இந்தியாவில் தேராவுக்கு அருகேயுள்ள டெராய் காட்டுப்பகுதிக்கு வேட்டைக்குச் சென்றிருந்தபோது, திமேத்தி
என்றழைக்கப்படும் புலிக் குட்டியை என் தாத்தா கண்டெடுத்தார். தேராவுக்கு அருகே வாழ்ந்து வந்ததால் அந்தக் காடுகளைப் பற்றி என் தாத்தாவுக்கு நன்கு தெரியும் என்பதால், தங்களுடன் அவரும் கட்டாயம் வர வேண்டும் என்று வற்புறுத்தி ஒரு வேட்டைக் குழு அவரை அழைத்துச் சென்றிருந்தது.
வேட்டைக் குழு முன்னே செல்ல, காட்டுப் பாதையில் தாத்தா சற்று பின்தங்கி சாவகாசமாக நடந்துகொண்டிருந்தார்.
அப்போதுதான் ஆதரவற்றுக் கிடந்த ஒரு புலிக் குட்டியை அவர் கண்டெடுத்தார். பதினெட்டு அங்குல நீளம் (ஒன்றரை அடி) இருந்த அந்தப் புலிக்குட்டி, மூங்கில் புதரின் வேர்களுக்கு இடையில் ஒதுங்கியிருந்தது. அந்த வேட்டைப் பயணம் முடிந்தபோது, புலிக்குட்டியை தாத்தா தேராவுக்கு கொண்டுவந்தார். என் பாட்டி அந்த புலிக் குட்டிக்கு திமேத்தி என்று பெயரிட்டார்.
Reviews
There are no reviews yet.