கொக்கு பற பற

Author:
Publisher:

120.00

கொக்கே… கொக்கே… பூ போடு!

கொள்ளை அழகே பூ போடு!

வக்கா… வக்கா… பூ போடு!

வலசைப் பறவையே பூ போடு!

எனப் பாடி இரு கரங்களை மடக்கி அதிலுள்ள விரல்களின் நகங்களை ஒன்றாகத் தேய்ப்போம். அப்பறவைகள் எங்கள் கண்களை விட்டு அகலும் வரை தேய்ப்பதை நிறுத்த மாட்டோம். அவ்வாறு தேய்த்து முடித்த சில நண்பர்களுக்கு நகங்களில் வெண்மை நிறத்தில் சிறு புள்ளிப் போல் தோன்றும்… அதனை அந்தப் பறவைகள் (கொக்கு என நினைத்தப் பறவைகள்) போட்ட பூவாக நினைத்து அக மகிழ்வோம். அப்பூப்போட்ட நகங்களுக்கு சொந்தக்காரன் நினைத்தது நடக்கும் என்கிற நம்பிக்கையும் அப்போது உண்டு. அவ்வாறான ஒரு சூழலில் என் மனதில் நுழைந்தன வெள்ளை வண்ணக் கொக்குகள்.