பரம்பிக்குளம் புலிகள்

Author: ,
Publisher:

100.00

தாவர உண்ணிகளுக்கான உணவு தாவரங்கள். அவை ஓரிடத்தில் நிலையாக விளைந்திருப்பதால் அங்கே போய் நின்று நிதானமாக சாப்பிடலாம். ஊன் உண்ணி அப்படியல்ல. வேட்டையாடியோ, இறந்த உடல்களையோ, பூச்சி, புழுக்களையோதான் சாப்பிட வேண்டும் அதிலும் புலி என்கிற இந்த ஊன் உண்ணியின் வாழ்க்கை ரொம்பவும் சிரமமானது, அது இதற்கு இணையான வேகத்தில் அல்லது இதை விட பலசாலியாக உள்ள விலங்குகளை வேட்டையாடியே உணவாக உட்கொள்ள வேண்டி உள்ளது. அப்படி அவை தன் ஆற்றலை வெளிப்படுத்தும்போது தான் இரையாக்க எதிர்கொள்ளும் விலங்கே இதனைக் கொல்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். மேலும் இதனைப் போட்டியாகக் கருதி தன் வாழிடத்தை தகவமைத்துக் கொள்ளும் இன்னொரு புலியாலும் இதன் இறப்பு நேரிடுகிறது. ஆகவே எல்லா இடத்திலும் சண்டைதான்.