சுற்றுச்சூழலும் புத்தச் சமயமும் நூலைப் பற்றிய குறிப்பு
சுற்றுப்புற இயற்கைச்சூழல் குறித்தும் சூழல் சார்ந்த உயிரினங்கள்/ தாவரங்கள் குறித்தும் புத்தர் கொண்டிருந்த அளவு கடந்த கரிசனமும்,
உயிரிரக்கப் பேரன்பும் அவரது தத்துவப் போதனைகளெங்கும் ஆங்காங்கே ஊடாடிக் கிடக்கின்றன என்ற நூலாசிரியரின் தெளிவாகப் புரிதலை மையமிட்டே,
இந்த சுற்றுச்சூழலும் புத்தச் சமயமும் எனும் நூல்,
மூன்று இயல்களாக விரித்துத் தரப்பட்டிருக்கின்றது என்பதை புத்தர் வாழ்வியல் பற்றிய வரலாற்றுத் தெளிவோடு,
கூர்மையாக வாசிக்கிற யாவராலும் எளிமையாக உணர்ந்து கொள்ள இயலும்.
மாறாக, புத்தரின் வாழ்வியல் வரலாற்றுடனான மெய்யியல் தத்துவப் போதனைகளில் எந்தவிதமான அடிப்படை அறிமுக அறிதலும் புரிதலுமற்ற வாசகர்களுக்கு இந்த சுற்றுச்சூழலும் புத்தச் சமயமும் எனும் நூல் ஒரு புரியாத புதிரென்பதாகவே தான் இருக்கும்.




Reviews
There are no reviews yet.