உயிர் புதையல்
₹140.00
(Free Shipping Above 500)
- Description
- Reviews (0)
Description
கவிஞர், எழுத்தாளர், ஆவணப்பட இயக்குனர், கானுயிர் ஆர்வலர் என பன்முகத் தளங்களில் அறியப்பட்ட கோவை சதாசிவத்தின் சூழலியலைப் பற்றிய எளிமையான நேரடியான புத்தகமிது.
மலைத் தொடர்களைக் காணும் ஒரு கவிமனதின் துடிப்புகளாக 22 கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. மலைகள், காடுகள், பறவைகள், விலங்குகள், நதிகள், கடற்கரைகள் என இயற்கையின் கூறுகள் ஒவ்வொன்றைப் பற்றியும் நாம் அறிய வேண்டிய அரிய தகவல்களுடன் இயற்கையைத் தாயாகவும் காடுகளைக் குல சாமியாகவும் உளமார நம்புகிற உணர்வுப் பூர்வமான ஒரு மனதின் வெளிப்பாடாக இக்கட்டுரைகள் அமைந்துள்ளன.
‘வள்ளுவனும், வள்ளலாரும், பாரதியும், இராகுல்ஜியும், ஏங்கல்சும் சூழலியல் உணர்வோடு தான் வாழ்ந்தார்கள் படைத்தார்கள்’ என்பது நமக்கு உறைக்கும் விதத்தில் இந்நூலில் சொல்லப்பட்டுள்ளது, எளிமையும் கவித்துவமும் ஒன்றுகூடிய மொழியில் வாசகரை உடனே தன்னோடு அணைத்து அழைத்துச் செல்லும் நடையில் இக்கட்டுரைகள் அமைந்துள்ளது இந்நூலின் தனிச்சிறப்பாகும்.
நாளெல்லாம் இயற்கையைச் சீண்டிக்கொண்டிருக்கும் மனிதனை வலுவான வார்த்தைகளால், வாதங்களால், குற்ற உணர்வுக்கு ஆளாக்குகிறது இந்தப் புதையல்.
Be the first to review “உயிர் புதையல்”
- #5 Best Seller in Kovai Sathasivam Books
- #8 Best Seller in Animal Tamil Books
- #10 Best Seller in All Tamil Books
Reviews
There are no reviews yet.