வீட்டில் இருக்க வேண்டிய சித்த மருந்துகள் நூலைப் பற்றிய குறிப்பு
ஒவ்வொரு நோய்க் குறிகுணங்களுக்கும் வரைமுறையின்றி மாத்திரைகளை அலமாரிகளில் அடுக்கி வைத்திருக்கும் நாம்,
நம் மரபோடு பிணைந்த சித்த மருந்துகளுக்கு இடம் அளித்திருக்கிறோமா!
தலைவலி,
செரிமான உபாதைகள்,
உடல் சோர்வு,
மலச்சிக்கல் போன்ற குறிகுணங்களுக்கு வீட்டிலேயே வைத்து நாம் பயன்படுத்தக்கூடிய ஏராளமான சித்த மருந்துகள் இருக்கின்றன.
சளி, இருமலுக்கு ஆடாதோடை மணப்பாகு,
தலைபாரத்துக்குப் பற்று போட நீர்க்கோவை மாத்திரை,
செரிமான உபாதைகளுக்கு ஓமத் தீநீர்,
ஏலாதி சூரணம்,
மூட்டு வலிக்கு பற்று போட கழற்சிப் பற்று,
மூசாம்பரப் பற்று,
இரத்த சோகையைத் தடுக்கும் மாதுளை மணப்பாகு,
ஒற்றடமிட பயன்படும் மருந்துகள்,
வேது பிடித்து நோய் போக்க உதவும் மருந்துகள் என வீட்டுலேயே எளிமையாகப் பயன்படுத்திக்கொள்ளக் கூடிய மருந்துகளை உங்கள் வீட்டு சித்த மருத்துவ அலமாரியில் அடுக்கி வைக்கத் தயாராகுங்கள் என்று வீட்டில் இருக்க வேண்டிய சித்த மருந்துகள் எனும் இப்புத்தகத்தில் இந்நூலின் ஆசிரியரான சித்த மருத்துவர் கூறுகிறார்!





Reviews
There are no reviews yet.