தமிழ்நாட்டு அகழாய்வுகள் ஓர் அறிமுகம் என்ற நூலைப் பற்றி
இன்றைய காலகட்டத்தில் அகழாய்வைப் பற்றி மக்களுக்கு சிறிது விழிப்புணர்வு ஏற்பட்டாலும் கூட நிலம் வைத்திருப்பவர்கள் மத்தியில் பயம் இருக்கத் தான் செய்கிறது.
அரசாங்கம் அகழாய்வு செய்வதாக சொல்லி நிலத்தை கையக படுத்திவிடுவார்களோ என்ற ஒரு காரணம் தான்.
ஆனால் உண்மையில் அப்படியில்லை.
அகழாய்வு செய்வதால் பல செய்திகள் வெளிவரும்.
அதேசமயம் அகழாய்வு பணி முடிந்தபிறகு நிலத்தை உரியவர்களிடமே ஒப்படைத்துவிடுவார்கள்.
பண்டைய காலத்தில் எளிய மக்களுக்கு படிப்பறிவு இல்லை என்ற கூற்றை அடியோடு மாற்றியது அகழ்வாய்வுகள் தான்.
இன்று கலியாண சீர் வரிசையில் உள்ள பாத்திரங்களுக்கு பெயர் பொறித்து வாங்கு வழங்கம் எப்படி வந்தது?
இன்று நேற்றல்ல.
பல நூற்றாண்டு வழங்கம் அது.
பாத்திரங்களில் பெயர் பொறிபவர்கள் பட்ட படிப்புப் படித்தவர்கள் அல்ல.
சாதாரண எளிய மக்களில் ஒருவர்.
அவரைப் போல் அக்காலத்திலும் இருந்துள்ளர்கள்.
அவர்களை வெளிப்படுத்தியது இந்த அகழாய்வுகள் தான்.




Reviews
There are no reviews yet.