ஆரவல்லி அழிப்பின் அரசியல் நூல் பற்றி
200 கோடி ஆண்டுகள் தொன்மையான ஆரவல்லி மலைத்தொடர் என்ற இந்தியாவின் நிலவியல் அதிசயத்தையே ஒட்டுமொத்தமாக கார்ப்ரேட்டுகளுக்கு காவு கொடுக்க முயற்சித்து வருகிறது ஒன்றிய பாஜக அரசு.
அதன் கனிம வளங்களை அதானி, அம்பானி வகையறாக்கள் கொள்ளை அடிப்பதை அனுமதிப்பதற்காகவே மலை குறித்த வரையறையையும் சட்டங்களையும் திருத்தி வருகிறது.
வட மேற்கு இந்தியாவின் பசுமைத் தடுப்பு அரணாக, நுரையீரலாக, நீராதாரமாக, வாழ்வாதாரமாக, வரலாற்றுத் தலமாக,
ஆன்மீகத் தலமாக விளங்கும் ஆரவல்லியைக் கார்ப்பரேட்களுக்கும் சுரங்க மாஃபியாக்களுக்கும் ரியல் எஸ்டேட் தாதாகளுக்கும் தாரை வார்ப்பது தேச விரோதச் செயலாகும்.
இந்த தேச விரோதச் செயலையும் ஆரவல்லியை காப்பாற்ற வேண்டிய முக்கியத்துவத்தையும் இந்த நூல் வெளிச்சப்படுத்துகிறது..





Reviews
There are no reviews yet.