கோவை சதாசிவம் எழுதிய இப்படிக்கு மரம் குறித்து
மரம் செய்ய விரும்பும்
மனிதர்களுக்கு ….
உலகில் ஏற்பட்டுள்ள புவிவெப்பமயமாகுதல், ஓசோன் சிதைவு போன்ற சூழல் சீர்கேடுகளால் ஆயிரத்திற்கும் மேலான தாவரங்களின் பூக்கள் தங்களின் புற ஊதா நிறமிகளை மாற்றிக் கொள்கின்றன! கலப்பின தாவர வளர்ச்சியால் பூக்கள் இயல்பான வாசனையை சிறிது, சிறிதாக இழந்து விட்டன!
காற்று மாசால் பூக்களின் மணம் பரவும் தூரம் வெகுவாகக்குறைந்து விட்டது! பூக்களின் வாசனை மூலக்கூறுகள் காற்றில் வேகமாகவும், குறிப்பிட்ட தொலைவிற்கும்பரவக்கூடியவை!
காற்று கடத்திச்செல்லும் வாசனையில் தூசிகள் அடர்ந்து தூய்மை கெட்டு விட்டதால் … மகரந்தச்சேர்க்கைசெய்யும் பூச்சிகள் சுமார் இருபதடித்தூரத்தில் நுகர்ந்த வாசனையை இப்போது இரண்டடி தூரம் வந்தால் நுகரும் நிலை உருவாகி விட்டது!
கடந்த பதினைந்து ஆண்டுகளாக மகரந்தச்சேர்கையில் ஈடுபடும் பல பூச்சியினங்கள் குழப்பத்திற்கு ஆளாகியுள்ளன.
மரங்களால் பூமிக்கு அழகா ..?
பூமியால் மரங்களுக்கு அழகா ..?
மரங்கள் குறித்து சிறப்பாக எழுதியுள்ள புத்தகம் இப்படிக்கு மரம் ஆகும்.
Reviews
There are no reviews yet.