கேரளா
₹100.00
கேரளாவில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு குறைந்த செலவில் எப்படி செல்வது என்பதை எல்லோருக்கும் புரியும்படி தெளிவாக இந்த புத்தகத்தில் குறிப்பிட்டதை பார்க்கும் போதே ஆஹா எப்போ போகலாம் என்ற எண்ணத்தை தூண்டுகிறது.
- Description
- Reviews (0)
Description
ஊர் சுற்றி, தமிழ்நாட்டில் இந்த அடைமொழி பெற்றவர்கள் உருப்படாதவர்கள் என்கிற தொனியில் எடுத்தாளப்படுகிறது.
ஆனால் புத்தர், மகாவீர் உட்பட உலகில் பெரும் மாற்றங்களை நிகழ்த்தியவர்கள், இந்த உலகின் பல கண்டங்களை நாடுகளை கண்டுபிடித்தவர்கள் எல்லாருமே ஊர் சுற்றிகள்தான்.
ஊர் சுற்றி புராணம் என்கிற தன்னுடைய பி புத்தகத்தில் இராகுல் சாங்கிருத்தியாயன் இப்படியாக சொல்கிறார், “ஒரு மனிதன் தன்னுடைய பதின்பருவத்தில் வீட்டை விட்டு வெளியேறிவிட வேண்டும். அவன் ஊர் சுற்றியாக இருக்க வேண்டும்”.
ஆம் உலகம் இன்பத்திலும் துன்பத்திலும் யாரிடமிருந்தாவது உதவி பெறுகிறது என்றால் அது ஊர் சுற்றிகளினால்தான். ஊர் சுற்றிகளே உலகை ஆளும் ஆளுமைமிக்கவர்களாக இருக்கிறார்கள்.
அப்படியான ஒரு ஊர் சுற்றித்தான், வில்லேஜ் டேட்டாபேஸ் நிறுவனர் நண்பர் ரகு. பயணம் ஒன்றே மனிதனின் மனதை வேகமாக செழுமையாக்கும் காரணி.
மனநிலை சரியில்லை என்றால், உளவியல் பாதிப்புகளுக்குள்ளானவர்கள் எல்லாரையும் எங்காவது வெளியில் அழைத்து செல்லுங்கள் என்று மருத்துவர்கள் சொல்வதை படங்களில் பார்த்திருப்பீர்கள்.
அப்படி நோயால், உளவியல் சிக்கல்களால் பீடிக்கப்பட்ட இந்த சமூகத்தை வெளியில் அழைத்து செல்லும் உன்னத பணியை செய்து வருகிறார்.
காணொளிகளாக மட்டுமில்லாமல், தற்போது அவற்றை எழுத்து வடிவில் கொண்டு வருகிறார். ஓரிடத்திற்கு பயணிக்கும்போது, மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அங்கே எப்படி போக வேண்டும், எங்கே தங்க வேண்டும், எவ்வளவு செலவு ஆகும் என்கிற முழு விபரங்களையும் இந்த புத்தகத்தில் சொல்லிவிடுகிறார்.
அவரது நீண்ட பயணத்தில் கேரளா எனும் ஒரு பகுதியை மட்டும் முதல் புத்தகமாக எழுதி இருக்கிறார்.
நண்பர்களே பயணியுங்கள், பயணம் ஒன்றுதான் உங்களை மனிதனாக தொடர்ந்து இயங்கு செய்யும்.
அத்தகைய ஆற்றலை, பயணிக்க வேண்டும் என்கிற ஆசையை இந்த புத்தகம் உங்களுக்கு வழங்கும். அவசியம் எல்லாரும் படிக்க வேண்டிய புத்தகம்.
அருண்.மோ Thamizh Studio
Be the first to review “கேரளா”
- #3 Best Seller in All Tamil Books
- #3 Best Seller in New Tamil Books
Reviews
There are no reviews yet.