பாரம்பரிய இயற்கை மருத்துவம் எனும் நூலைப் பற்றிய குறிப்பு
உணவே மருந்து, மருந்தே உணவு என்ற சித்த மருத்துவத்தின் தத்துவத்தை மிக அழகாகத் தனது கட்டுரைகளில் விவரித்துச் சொல்கிறார்.
திருக்குறளில் மருந்து அதிகாரத்தில் உள்ள பத்து குறள்களுக்கும் விளக்கவுரையாக இவரது கட்டுரைகள் அமைந்துள்ளன.
‘தடம் மாறிய உணவுப் பழக்கங்கள்: தகதகக்கும் நோய்கள்’ என்ற ஒரு கட்டுரையின் தலைப்பு, கவிதை நயத்துடன் அமைந்துள்ளது.
அதைப் பாராட்டாமல் இருக்க முடியாது.
பல நோய்கள் குறித்தும் கட்டுரைகள் இத்தொகுப்பில் உள்ளன.
நுகர்வு கலாச்சாரத்தில் பாரம்பரிய சித்த மருத்துவத்தைத் தொலைத்துவிட்டு இருக்கின்றோம்.
இந்நூலைப் படிப்பதன் மூலம் இழந்த மருத்துவ அறிவை மீட்டெடுக்க முடியும்.
Reviews
There are no reviews yet.