அழிக்கால் பேரிடர் ’22 என்ற நூலைப் பற்றிய குறிப்புகள்
இயற்கையின் விதிகளை மீறமுடியாது என்பதை நாம் கற்றுக் கொள்வதே இல்லை.
துறைமுகங்கள் பெரியதோ சிறியதோ அறிவியல் சிந்தனையற்ற கட்டுமானங்கள் பாதிப்புகளையே ஏற்படுத்தும்.
முட்டம் மீன்பிடி துறைமுகத்தின் மிக நீண்ட அலைத் தடுப்புச் சுவரால் அதன் அருகிலுள்ள அழிக்கால் என்னும் கடற்கரை சிற்றூர் கடல் அரிப்பால் உள்வாங்கி அழிவுக்கு ஆளாகியுள்ளது.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழைக்காலத்தில் கடந்த 2.7.2022 அன்று ஊருக்குள் புகுந்த அலைகள் மணலை வாரிக்கொண்டு வந்து மீனவ மக்களின் வீடுகளை மூழ்கடித்துள்ளன.
கள ஆய்வுக்காக எழுத்தாளர் வறீதையா கான்ஸ்தந்தீன் அழிக்காலுக்கு அழைத்துச் சென்றபோது இராணுவத் தடுப்பு போல பாதுகாப்புக்கு மணல் மூட்டை அடுக்கப்பட்ட வீடுகள், அறவே காலி செய்யப்பட்டுவிட்ட வீடுகள் என்று மீனவ மக்கள் தம் உள்ளக் குமுறலை வெளிப்படுத்தினர்.
தோழர் வறீதையா என்னிடம் கேட்டார்: ‘இதுதான் காலம் காலமாக ஒலிக்கும் கடற்கரை மக்களின் குரல்.
இது எப்போது அதிகாரத்துக்குக் கேக்கும்?’ என்னிடம் பதில் இல்லை.
– எழுத்தாளர் நக்கீரன்
Reviews
There are no reviews yet.