பஞ்சுமிட்டாய் 9ஆம் இதழ் குறித்து விவரங்கள்
கதை, பாடல், ஓவியங்கள், புதிர் என சிறார்களின் ஒவ்வொரு படைப்பிலும் இயற்கை மீதான அக்கறையும் கவனிப்பும் நிறைந்து இருந்தது.
கஜா புயல் அனுபவங்கள், எலி-பூனை விளையாட்டு, சின்ன தம்பி யானை, பரிசு தரும் சூரியன், கழுகு ராஜாவுக்கு சட்டை தைக்கும் தையல் சிட்டு என விதவிதமான படைப்புகள் இந்த இதழை அலங்கரித்திருக்கிறது.
குறிப்பாக யானை வழித்தடங்கள் குறித்த பிரச்சனைகளை ஓர் புதிராக மாற்றி எளிமையாக கொடுத்திருக்கிறோம். அதேப் போல “எலி-பூனை” விளையாட்டையும் அறிமுகம் செய்திருக்கிறோம்.
இம்முறை ஓவியங்களை ஓவியர்கள் ராகவி, கார்த்திகா மற்றும் செளமியா அவர்கள் வரைந்திருக்கிறார்கள்.
சின்னத்தம்பி புதிருக்கான ஓவியத்தினை ஓவியர் செளமியா மிக நேர்த்தியாக செய்திருக்கிறார், அதேப் போல நாயின் மகிழ்ச்சி & காக்கை பாடலுக்கான ஓவியங்களை கார்த்திகா அழகாக செய்துள்ளார்.
கஜா புயலுக்கான ஓவியத்தை சுட்டி இஷானி செய்துள்ளார். மற்ற ஓவியங்கள் அனைத்தும் ராகவி செய்துள்ளார். ராகவியின் ஓவியங்கள் இதழுக்கு புதிய வடிவத்தினை கொடுத்திருக்கிறது.
பஞ்சு மிட்டாய் 9ஆம் இதழ் : இதழ் என்பது பல செயல்பாடுகளை செய்ய வைக்கிறது.
இதழுக்கான படைப்புகளை எதேச்சையான சூழலில் தேடிப்பிடிப்பது என்பது பயணங்களை உருவாக்கி தருகிறது.
இம்முறையும் சிறுவர்களின் படைப்புகளை சேகரிக்க சென்னை, பெங்களூர், வேதாரண்யம், திருப்பூர், கோவை, காயல்பட்டினம் என நிறைய ஊர்களுக்கு பயணித்தோம்.
சில இடங்களில் நிகழ்வுகளின் வழியே சேகரித்தோம், சில இடங்களில் நண்பர்களின் துணைக்கொண்டு கதைப்பெட்டி வழியை சேகரித்தோம்.
Reviews
There are no reviews yet.