புள்ளினங்காள் புத்தகம் நம் மண்ணின் பறவைகள் பற்றிய அற்புதமான ஆவணம்.
பறவையியல் அறிஞர்கள் பலரை நமக்கு தெரியாத வரலாற்று சான்றுகளுடன் விவரிக்கும் சுவாரசியமான நடை நம்மை வியக்க வைக்கிறது.
பறவைகளை குறித்து விரிவாக அறிவியல் தகவல்களுடன் கூடவே பறவை ஆளுமைகளும் குறித்து சொல்லி இருப்பது பறவை ஆர்வலர்களுக்கு ஆச்சரியம் கொடுக்கும்.
எளிமையாக அதே சமயம் ஆழமாக பறவைகள் பற்றி தெரிந்து கொள்ள புள்ளினங்கள் நூல் சிறந்த நூல் ஆகும்.
பாபி முருகேசன் –
இயற்கையை ரசிக்க மட்டுமே செய்யும் இந்த தலைமுறைக்கு இயற்கையை , பறவைகளை அவதானிக்கவும், பேணவும் வேண்டும் எனும் அவசியத்தை கற்றுத் தருகிற புத்தகம் இது. இந்த நவீன தலைமுறை எழுத்தாளர் கிருபாநந்தினிக்கு நல்ல ஒரு துவக்கமே. அனைவரும் படிக்க வேண்டிய நூல். வாழ்த்துக்கள் முனைவர். கிருபாநந்தினிக்கு