தூவி

தூவி

தூவி - சதீஷ் முத்து கோபால்

தூவி

90.00

In stock
#1 Best Seller in Satheesh Muthu Gopal

90.00

தமிழ் பசுமை இலக்கியத்திற்கு சதீஷின் பங்களிப்பான இந்த தூவி(Thuvi) நூல் புறவுலகில் அக்கறை காட்டும் எல்லோரிடமும் இருக்க வேண்டும் என வாழ்த்துகின்றேன். சிறப்பாக பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இது சென்று சேர வேண்டும்.
-தியடோர் பாஸ்கரன்
Publisher:
Author:

Description

தூவி(Thuvi) குறித்து தியடோர் பாஸ்கரன் 

உரைநடை செய்ய முடியாததை ஒரு கவிதை செய்து விடும்.  நமது சுதந்திரப் போராட்ட்த்திலும் கவிதை இலக்கியம் தன் பங்களிப்பை செய்த்தது. பாரதியையும் நாமக்கல் கவிஞரையும் யார் மறக்க முடியும்?

பறவைகளை பல்லாண்டுகளாக கூர்ந்து அவதானித்தனின் பயனாக புள்ளின்ங்களின் பல பரிமாணங்களை இந்த கவிதை தொகுப்பில் நம் மனக்கண் முன் கொண்டு வந்து நிறுத்த நூலாசிரியர் சதீஷால் முடிகின்றது  அவைகளைன் தோற்றப்பொலிவு, வாழ்விடங்கள், இயல்புகள்  கவிதைகளில் வெளிப்படுகின்றன. கொடிக்கால் வாலாட்டி குருவி, தனது வாலை பக்கவாட்டில் அசைப்பதை பதிவு செய்கின்றார். நாம் அரிதாக பார்க்க்க்கூடிய கள்ளிக்குயிலின் சிவப்பு அலகை வர்ணிக்கின்றார்.. சில பறவைகளின் .காண அரிதான சில நடவடிக்கைகளைப்பற்றி எழுதின்றார் .murmuration  என்று பறவையியலாளர்கள் குறிப்பிடும் செயல்பாட்டை

ஓராயிரம் சோளக்குருவிகள்

ஒருங்கிணைக்கும்  அழகு நடனம் 

இயற்கையின் அற்புதம்

என வர்ணிக்கின்றார்.   அதே போல பல பறவைகளை  சரியான பெயர் சொல்லி அறிமுகப்படுத்துகின்றார். புள்ளினம், விலங்கினம் இவற்றின் பெயர்களில் பெருங்குழப்பம் நிலவும் தமிழ்ச்சூழலில் இது வரவேற்கத்தக்கது.

தமிழ் பசுமை இலக்கியத்திற்கு சதீஷின் பங்களிப்பான இந்த தூவி நூல் புறவுலகில் அக்கறை காட்டும் எல்லோரிடமும் இருக்க வேண்டும் என வாழ்த்துகின்றேன். சிறப்பாக பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இது சென்று சேர வேண்டும்.

-தியடோர் பாஸ்கரன்

பறவைகளை கவிதையாக்குவதும், கவிதையை பறவைகள் ஆக்குவதும் கொஞ்சம் சிக்கலான, நுட்பமான பணிதான்! அப்பணியை அறிவியலோடும், அவதானிப்போடும் செய்திருக்கும் சதீசு முத்து கோபாலை முதலில் வாழ்த்துவோம்!

-கோவை சதாசிவம் 

சதீஸ் முத்து கோபால் நூல்கள் 

Reviews

There are no reviews yet.


Be the first to review “தூவி”

Nishanth from Karur bought this item recently.
This item is Best Seller in following categories:
has been added to your cart:
Checkout