வீட்டில் இருக்க வேண்டிய மூலிகைகள் நூலைப் பற்றிய குறிப்பு
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்திணைகளிலும், நிலத்தின் தன்மைக்கு ஏற்ப அங்கு வசிக்கும் மனிதர்களுக்கு உண்டாகும் நோய்களுக்கு ஏற்ப பல்வேறு மூலிகைகள் விளைந்திருப்பதைப் பார்க்க முடியும்.
உலகளவில் பேசும் போது, நமது நிலப்பரப்போ மூலிகை வளம் நிறைந்திருக்கும் சொர்க்கபுரி!…
மூலிகைகளுக்கா நம்மிடம் பஞ்சம்…!
இயற்கையின் அவதாரமான மூலிகைகள் குறித்து தெரிந்துகொண்டு,
நமக்கு ஏற்படும் எளிய நோய்களை மூலிகைகளின் மூலம் தவிர்க்கும் கலையைக் கற்றுக் கொண்டால் நோயில்லா வாழ்க்கை சாத்தியம்!…
ஓர் உண்மை சொல்லவா…
குப்பைக்குப் போகும் தாவரம் என்று எதுவுமே இல்லை.
அணைத்து தாவரங்களுக்கும் பெரும் மருத்துவப் பெருமை உண்டு!
மூலிகைகள் சார்ந்து ஒன்றல்ல, இரண்டல்ல இலட்சக்கணக்கான ஆய்வுகள் நடைபெற்றிருக்கின்றன!
மூலிகைகளின் பெருமைகளைப் பரப்ப, மூலிகைகள் குறித்த அடிப்படை புரிதல் ஒவ்வொருவருக்கும் இருப்பது கட்டாயம் என்று வீட்டில் இருக்க வேண்டிய மூலிகைகள் எனும் இப்புத்தகத்தில் இந்நூலின் ஆசிரியரான சித்த மருத்துவர் கூறுகிறார்.
Reviews
There are no reviews yet.