விழுப்புரம் மாவட்டத்தில் மெய்யியல் – ஜைனம் நூல் பற்றி
ஜைனமதத்தின் மெய்யியலும் அதன் கோட்பாடுகளைப் பற்றி விரிவாக விளக்கி, செஞ்சி, மேல்மலையனூர் வட்டத்தில் உள்ள ஜைனத்தடங்களைக் விரிவாக பேசுகிறது இந்நூல்.
கோயில்கள், சிற்பங்கள், கல்வெட்டுகள், ஊர்த்தகவல்கள் ஆகியவற்றுடன் தத்துவத்தையும் இணைத்து பேசும் இந்நூல் தனி வகையிலானது.
இந்நூலின் ஆசிரியர் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டத்தில் உள்ள அனந்தபுரத்தில் 1950ஆம் ஆண்டு பிறந்தவர்.
தமிழ்நாடு மின்வாரியத் துறையில் அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். விழுப்புரம், செஞ்சி பகுதிகளில் 40 ஆண்டுகளுக்கு மேலாக கல்வெட்டு, பாறை ஓவியங்கள், தொல்லியல் இடங்களை ஆய்வு செய்து பல அரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர்.
இவர் 20க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
செஞ்சி அரசர்களும் கோட்டைகளும், தமிழ்நாட்டில் ஜைனம் (பொ.ஆ.6 ஆம் நூற்றாண்டு வரை), இருளும் ஒளியும் – கட்டுரைத் தொகுப்பு உள்ளிட்ட நூல்கள் குறிப்பிடத்தக்கதாகும்.





Reviews
There are no reviews yet.