யானைகளின் வருகை புத்தகம் யானைகளின் உண்மை நிலையை தெரிவிக்கின்றது..
ஆப்ரேஷனுக்கு குறி வைக்கும் ஆண் யானை உண்மையில் போக்கிரி யானையே கிடையாது. அது ஒரு சாதுவான பிராணி, மனிதர்களை அடித்துக் கொன்றும், விவசாய விளைபொருட்களை சேதப்படுத்தி வருவதும் வேறு ஓர் ஆண் யானை. அதை விட்டுவிட்டு சாதுவான அப்பிராணி யானையை பிடித்துச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் அதிகாரிகள் என்ற சர்ச்சைகளும் சூழலியல் ஆர்வலர்கள் மத்தியில் குதி போட ஆரம்பித்தன.
இந்த சூழ்நிலையில் 17.06.2016 இரவு எட்டிமடை பகுதியில் உள்ள வாழைத்தோப்புகளில் 2 யானைகளுடன் சுற்றித்திரிந்த ஆண் யானை அடுத்தநாள் 18.06.2016 அதிகாலை 4.15 மணிக்கு மதுக்கரை ராணுவ முகாம் அருகே வந்தது. அங்கே தயார் நிலையில் இருந்த வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவக்குழுவினர் அதைச் சுற்றி வளைத்து துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனர்.
கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கு மேல் மயக்க ஊசியும் போக்கு காட்டிய யானையை பிறகு கட்டுக்குள் கொண்டுவந்தனர். நவக்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கும்கிகளைக் கொண்டு வந்து அவற்றின் உதவியுடன் லாரியில் ஏற்றி டாப் ஸ்லிப் வரகளியாறு யானைகள் முகாமிற்கு கொண்டு சென்று அங்கு இதற்கென அமைக்கப்பட்டிருந்த கராலில் அடைத்தனர்.
Reviews
There are no reviews yet.