தியடோர் பாஸ்கரன்-கையிலிருக்கும் பூமி புத்தகம் பற்றி
உயிரினங்கள் – உறைவிடங்கள் – சுற்றுச்சூழல் கருத்தாக்கங்கள் . . சூழியல் பங்களிப்பாளர்கள் – வளர்ப்புப் பிராணிகள் சார்ந்து சு.தியடோர் பாஸ்கரன் இதுவரை எழுதிய அனைத்துக் கட்டுரைகளின் முழுத் தொகுப்பே இந்நூல்.
சூழலியல் குறித்து தமிழில் அரிய படங்களுடன் எழுதப்பட்ட ஒரு மிகச்சிறந்த நூலாகும், மேலும் இந்நூல் சூழலியல் ஆர்வலர்களுக்கு ஓர் அரிய நூலாகவும் அமையக்கூடும்.
நாம் வாழும் பூமியின் மீது அக்கறை கொண்ட ஒவ்வொருவரின் கையிலும் இருக்கவேண்டிய நூல்.
கையிலிருக்கும் பூமி நூலை வாசிக்கையில் ,இப்படியான நூல்களை முழு தொகுப்பாக வாசிக்க வேண்டிய மற்றொரு காரணம்புலப்பட்டது. சில கருத்துகளை ஒன்றுக்கும் மேல்பட்ட கட்டுரைகளில்கூறியிருக்கிறார்.
சிறு தொகுப்புகள் வெளியிடுகையில், ஒரு கருத்து ஒன்று,இரண்டு கட்டுரைகளுக்கு மேல் கையாளப்பட்டருக்க வாய்ப்பு குறைவு.
ஒருவருடத்தில் வந்த, இரண்டு வருடத்தில் வந்த கட்டுரைகள் எனுமபோது, கருத்துக்கள் மீண்டும் மீண்டும் வருவது குறைவாக இருக்கும்.
முழுதொகுப்பில், ஒரே பிரச்சினையை பேசும் பல கட்டுரைகள் இருக்க கூடும். இதுமேல்நோக்காக தேவை இல்லாததாக தென்பட்டாலும் , கையிலிருக்கும் பூமி வாசித்தபின், சூழியல், காட்டுயிர் சார்ந்த நூல்களில், இது நூலின் சிறப்பை, தாக்கத்தை பல மடங்கு கூட்டுகிறது என்பேன்.
ஒரு பிரச்சினையைவெவ்வேறு இடங்களில், கோணங்களில் படிக்கும் போது, மனதில் நன்கு பதிந்து விடுகிறது. திரு பாஸ்கரன் எடுத்துரைக்கும் பிரச்சினைகளும தீர்வுகளும் அப்படி மனதில் படிய காரணம் இதுதான்.
கையிலிருக்கும் பூமி நூல் தொகுக்கப்பட்ட முறை நேர்த்தியாக உள்ளது. உயிரினங்கள் (என்னைமிகவும் கவர்ந்தது, பிடித்திருந்தது – மரங்கள், செடிகள் பற்றியகட்டுரைகளும் உயிரினங்கள் வகைமையில் சேர்த்தது), உறைவிடங்கள்,கருத்தாக்கங்கள், ஆளுமைகள், விவாதங்கள், கல்வி, வீட்டு பிராணிகள் எனதெளிவாக, எளிதில் புரிந்து கொள்ள கூடியதுமாக இருக்கிறது.
கட்டுரைதலைப்புகள் , அந்த கட்டுரை கூறும் கருத்து, விஷயம் பற்றி சுட்டுவதாகஇருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். இந்த எண்ணம் எனக்குவந்த காரணம் – இந்த தொகுப்பு, ஒரு முறை வாசித்து விட்டு கடந்து செல்லகூடியது அல்ல.
சூழியல், காட்டுயிர், அவற்றின் பாதுகாப்பு, சம்பந்தமான பலவிஷயங்கள், கருத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சொல்லப்பட்டுள்ள விஷயங்களும், விவரிக்கப்பட்டுள்ள விதமும், கட்டுரைகளை மீண்டும் மீண்டும் வாசிக்க தூண்டுவன.
தியடோர் பாஸ்கரன் எழுதி உள்ள ஒவ்வொரு கட்டுரையும் 3, 4 பக்கங்களே அளவு உள்ளதால்,ஒரு முழு கட்டுரை ஒரே அமர்வில் படிப்பதில் சிரமம் இருக்காது. பள்ளிசிறுவர் சிறுமியர்களை, வாசிப்பு பழக்கம் அதே நேரம் சூழியல், காட்டுயிர்பேணல் இரண்டிலும் ஆர்வத்தை தூண்ட வைக்க தகுந்தது.
கையிலிருக்கும் பூமி கட்டுரைகளில் எடுத்தாளும் பிரச்சினைகள், இன்றையதமிழகம், இந்தியா உலகம் அனைத்து தளங்களிலும மிக முக்கியமானவையாகும்.
காடுகள் அழிப்பு, காட்டு உயிர் அழிப்பு, ஆற்றுமணல் தோண்டுவதால் ஏற்படும் இழப்புகள், மனித நாகரிகம் வளர்வதால்பூமிக்கும் அதில் வாழும் மற்ற உயிரினங்களுக்கும் ஏற்படும் ஆபத்துக்களும்என்ன என்று தெளிவாக விளக்கும் கட்டுரைகள் பல உள்ளன.
ஒவ்வொரு விளைவையும்அவர் விளக்கும் போது, மனதில் ஒரு வருத்தம், பூமி, சூழியல், உயிரினங்கள்குறித்து பெரும்பாலான மக்கள் அக்கறை கொள்ளாமல் இருப்பதை எண்ணி ஒருஏமாற்றம் உண்டாவதை தவிர்க்க முடியாது. இது என்னையும் சேர்த்தே சொல்லும்குறை.
காடு அழிப்பு குறித்து எழுதும் அதே வேளையில் அதனால் பாதிக்கப்படும்காட்டை சார்ந்து வாழும் பழம்குடியினர் வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்பும்சேர்த்தே விளக்கப்பட்டுள்ளது.
வேங்கை, சிங்கம், சோலை மந்தி, மான் இனங்கள், முதல் பல்லி, எறும்பு, பறவைகள் ( தேன் சிட்டு முதல் ஆந்தை வரை) தமிழ்நாடு, இந்திய மாநிலங்களில் வாழும் பல பல உயிரினங்கள் பற்றி, ஒவ்வொரு உயிரினத்துக்கும் ஒரு கட்டுரைஎன தகவல் களஞ்சியம் நிறைந்துள்ள தொகுப்பு.
உயிரினங்களின வாழ்க்கை எப்படிநாகரீக வளர்ச்சியால் பாதிக்க பட்டது, என்ன பாதுகாப்பு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன, முன்னெடுக்கும் ஆளுமைகள், நிறுவனஙகள் , சரணாலயங்கள் என அனைத்துப் புள்ளிகளை யும் தொட்டு செல்கின்றன கட்டுரைகள்.
பல கட்டுரைகளில் தமிழ் மொழியில் சூழியல், காட்டுயிர் பாதுகாப்பு சம்பந்தமான துறைச்சொற்களின் போதாமையை சுட்டி காட்டியிருக்கிறார்.
மேலும், தமிழ் மொழியில் ஏற்கனவே இருக்கும் வளமையான உயிரினங்களின் பெயர் சொற்களும் பழக்கத்தில் புழஙகாமல் , ஆங்கில சொற்களின் நேரடி மொழிபெயர்ப்பு வார்த்தைகளின்உபயோகத்தை படிக்கும் போது வேதனையே மிஞ்சுகிறது. சிறந்த உதாரணம் – KingCobra என்பது, அதன் தமிழ் பெயரான கருநாகம் என அழைக்கப்படாமல், ஆங்கிலப்பெயரின் நேரடி மொழிபெயர்ப்பான ராஜநாகம் என்று அழக்கப்படுவது.
இன்னொருமுக்கியமான அவதானிப்பு, காட்டுயிர் பற்றி எழுதும் போது நாம், நம்ஊடகங்கள் உபயோகிக்கும சொற்கள் ஒரு எதிர்மறை அர்த்தத்தை உணர்த்துவதாக இருப்பது… “கொடிய” மிருகங்கள், “அட்டகாசம்”, “நாச வேலை” என்றுவிவரிப்பது.
காட்டு விலங்குகளின் வாழிடங்களில் மனிதன் ஆக்ரமித்து விட்டதால், அவை வாழ இடமில்லாமல் நம் இடங்களில் புகுந்தால், அதை ஏதோ அவை யோசித்து முன்முடிவோடு வந்து நாச வேலை செய்வதை போல் விவரிப்பது காட்டுயிர் பற்றி எதிர்மறை எண்ணத்தை தான் விளைவிக்கும்.
கட்டுரைகளில் பொறாமை படும் அளவிற்கு இருப்பது தியடோர் பாஸ்கரன் வெற்றி. அதே சமயம் மீண்டும் மீண்டும் வாசிக்க கூடிய கட்டுரைகள் அவர் தன் பயணங்களின் அனுபவத்தை கூறும் கட்டுரைகள்.
அவர் சென்ற இடங்களை பற்றிய விவரணைகள் அதிகமாக இல்லாமல், அந்தகாட்சிகள், இடங்கள் தரும் அனுபவத்தை தொட்டு காட்டும் இடங்கள் வாசிப்புஅனுபவத்தை உயர் த்துகிறது. அப்படியான இடங்களுக்கு சென்ற அனுபவம் இருந்தால் கட்டுரை மேலும் நெருக்கமாக உணரச்செய்கிறது.
தமிழ்நாட்டு நிலப்பரப்பில் உள்ள பல்வேறு மலைதொடற்சிகள், அவற்றின வரலாறு, ஆங்கிலேய ஆட்சி தொடங்கியபோது எப்படி காடுகள் அழிக்கப்பட்டன, ஊர்ப்பெயர் காரணங்கள், நல்லது செய்த ஆங்கிலேயர்கள் என காடுகள், மலைகள் பற்றி விவரிக்கும் கட்டுரைகளும் உண்டு.
தமிழ்நாடு மற்றும் இன்றி, அந்தமான், ஆப்பிரிக்கா என அவர் பயணித்தஇடங்களை பற்றி எழுதுகிறார். கட்டுரைகளில் மீண்டும் மீண்டும் இந்தஇடங்கள் சரியாக பேணப்படாமல் எப்படி வளர்ச்சிக்காகவும், சுற்றுலாதொழிலினாலும் சீரழிக்கப்படுகின்றன என்ற ஆதஙகம் வெளிப்படுகிறது..
தமிழ்நாட்டில் விலங்குரிமை இயக்கம், சுற்றுச்சூழல் சர்ச்சை பற்றி நான் இதுவரை எண்ணி இலாத கோணத்தில் ஒரு கருத்தை கூறுகிறார்.விலங்குரிமை தோன்றிய வரலாறு, காரணம் என விவரித்து, மேலை நாடுகளில் குறிப்பிட்ட காரணங்களுக்காக தோன்றிய இயக்கம் இங்கு முழுதாக பொருந்தாவிட்டாலும் அப்படியே பின்பற்ற படுவதாக கூறி, மேட்டுக்குடியினரின் விழுமியமான மரக்கறி உணவு சித்தாந்த்ததை, விலங்குரிமையுடன் குழப்பிக்கொள்ளப் படுகிறது என்கிறார். சிந்திக்க தூண்டும் கருத்து.
மேலும் வெறிநாய்களை கொல்வது பற்றியும் தெளிவாக தன் தரப்பை முன்வைக்கிறார். மனிதஉயிர் – வெறி நாய் உயிர் என்ற கேள்வி வரும் போது, வெறி நாய்களை கொல்வதே ஒரே தீர்வு என கூறும் தியோடர் அவர்கள், இதற்கு மாற்றாக விலங்குரிமை இயக்கங்கள் கூறும் ( இனப் பெருக்க தடை ஊசி, உயிருடன் அடைத்துபராமரித்தல்…) தீர்வுகள் சரியான தீர்வாகாது என்கிறார்.
Reviews
There are no reviews yet.