மௌன வசந்தம் உலகை மாற்றிய நூல்
கடந்த நூற்றாண்டில் மிகப் பெரிய தாக்கம் செலுத்திய 100 முக்கியப் புத்தகங்களில், ஒரு சுற்றுச்சூழல் புத்தகத்துக்கும் இடம் உண்டு: அது ரேச்சல் கார்சன் எழுதிய ‘மௌன வசந்தம்’ (Silent Spring). இந்தப் புத்தகம் வெளியானபோது, ‘அர்த்தமற்ற புத்தகம்’என்று முதலில் விமர்சித்திருந்தது ‘டைம்’ பத்திரிகை. ஆனால், அந்த ‘டைம்’ பத்திரிகையே பின்னாளில், ‘20-ம் நூற்றாண்டில் தாக்கம் செலுத்திய 100 முக்கிய ஆளுமைகள்’ என்று வெளியிட்டபட்டியலில்
ரேச்சல் கார்சனுக்கு இடம் அளிக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது வரலாறு.
சுற்றுச்சூழல் ஆராய்ச்சி பற்றிப் பேசும்போது, ரேச்சல் கார்சனைப் பற்றி பேசுவதைத் தவிர்க்க முடியாது. அறிவியல் முறைப்படி சுற்றுச்சூழல் பிரச்சினைகளை எப்படிப் பகுப்பாய்வது என்பதைக் கற்றுத்தந்தவர் ரேச்சல் கார்சன்தான்.
Reviews
There are no reviews yet.