ஆரோக்கியமே சிறந்த செல்வம் என்ற நூலைப் பற்றிய குறிப்புகள்
சித்த மருத்துவத்தை வெறும் அடுப்பங்கரைக்குள் முடக்கி விடாமல், இன்றைக்கு நானோ துகள் ஆய்வு முதல் ”கணினி உயிரியல் தொழில்நுட்பம்” வரை கொண்டு சென்றதற்கு, திருமூலரும் அகத்தியரும் யூகியும் புலிப்பாணியும் பின்னாட்களில் சாம்பசிவம் பிள்ளையும், அயோத்திதாச பண்டிதரும், ஹக்கீம் சாயுபுவும், குருசாமிக்கோனாரும், கண்ணுசாமிப்பிள்ளையும் என பலரும் சித்த மருத்துவ அறிவியலை, களப்புரிதலை, தத்தம் நீண்ட அனுபவங்களை, தம் மொழியில் நூலாக்கி பதிவிட்டதுதான் மிக மிக முக்கியக்காரணம்.
அந்த வகையில் இன்றைக்கு இளம் சித்த மருத்துவப் பட்டதாரிகள் சித்த மருத்துவ மூலிகைகளை மருத்துவ உணவுகளை மருந்தறிவியலை தமிழில் எழுதுவது பெரும் பெரும் வரவேற்பிற்கும் வாழ்த்துகளுக்கும் உரியது.
மருத்துவர் கார்த்திகேயன் இந்த இளம் படைப்பாளிகள் வரிசையில் முனைப்புடன் எழுதிவரும் சித்த மருத்துவப் பட்டதாரி.
எப்பொழுதும் கைபேசியில் ஆள்காட்டி விரலைத் தேய்த்துப்போக வைக்கும் நாம், கார்த்திகேயன் போன்ற இளம் சித்த மருத்துவர்கள் எழுதும் நூலை, சில பக்கங்களைப் புரட்டுவதிலேயே உடலையும் உள்ளத்தையும் உறுதியாக்கிட முடியும்.
உங்கள் எழுத்துக்களில் பலம் பெறுவது சித்த மருத்துவம் மட்டுமல்ல நம் தமிழ்சமூகமும் கூட!
Reviews
There are no reviews yet.