இயற்கையின் குரல் நூல் பற்றி
உலகின் அனைத்துத் தகவல்களையும் நம் கைபேசிவழி அறிவோம்.
ஆனால் நம்முடன் வளரும் மரத்தின் நிழலின் அருமையை உணர்வதில்லை.
வீட்ருகே கூவும் குரல் நமக்குக் கேட்பதில்லை, வல்லமை கொண்ட மனிதல் இயற்கையிடமிருந்து அந்நியமதகிவிட்டான்.
இந்த நூல் அந்த அந்நியப்படுத்தலுக்கு எதிரான ஒரு தேடல்.
இது வெறும் சூழல் பேசும் நூல் அல்ல; இதுவரை கேட்கப்படாத இயற்கையின் குரலைப் பதிவிடும் கோப்பு.
இயற்கையின் உணர்வைப் பற்றிய சிந்தனைப் பயணம்.
மக்களுக்கும் இயற்கைக்கும் உள்ள உறவை மீண்டும் நினைவூட்டும் முயற்சி.
இன்றைய உலக நெருக்கடிகள் அனைத்தும் தனித்தனியானவை அல்ல.
அவை ஒரே அடிப்படை நோயின் வெளிப்பாடுகள்.
அந்த நோய் மனிதன் தன்னை இயற்கையிலிருந்து பிரித்துக் கொண்ட நொடியிலிருந்து தொடங்கியது.
இந்த நூல் கூறும் எளிய உண்மை, மனிதன் இயற்கையின் அதிபதி அல்ல; உயிர் வலையமைப்பின் ஒரு கண்ணி மட்டுமே.
இந்தப் புரிதலே இயற்கைநேய மனத்தின் அடித்தளம்.
மரத்தை உயிர்த் தோழியாக, மண்ணை உயிரின் கருப்பையாக உணரும் தன்மை.
சங்க இலக்கியத்தின் திணை உணர்வு, பழங்குடி மக்களின் வாழ்வியல் ஞானம், நவீன சூழலியல் அறிவியல் ஆகிய அனைத்தும் இங்கு ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன.
இந்நூல் அறிவிலிருந்து ஒட்பத்திற்கான (ஞானம்) பயணத்தைத் தொடங்கி வைக்கிறது.
அறிவு உலகத்தின் வரம்பை விளக்குகிறது; ஞானத்தை ஞாலத்துடன் உறவு கொள்ளச் சொல்கிறது.
இயற்கையைக் காப்பது என்பது அடிப்படையில் மனிதனை மனிதனாக உருவாக்கும் செயல் என்பதை நினைவூட்டுகிறது.
மண்ணின் மொழியை மானுடம் மறந்த நிலையில், மீண்டும் இயற்கையுடன் உரையாடத் தொடங்கும் முயற்சியே இந்நூல்.



Reviews
There are no reviews yet.