பறவைகளின் உயிர்ச்சூழல் நூல் குறித்து !
பறவைகள் எச்சத்தின் மூலம் புதிய மரங்களை உற்பத்தி செய்கின்றன. பூச்சிகளை கட்டுப்படுத்துகின்றன. எச்சம் உரமாகிறது. மகரந்தச் சேர்க்கை செய்கிறது. பாறு போன்ற கழுகுகள் காட்டை சுத்தம் செய்கிறது. இப்படி பறவைகளால் நேரடியாகவும் மறைமுகமாகவும் எண்ணற்ற நன்மைகள் விளைகின்றன. பறவைகளால் சூழலுக்கும் நன்மை. மனிதர்களுக்கும் நன்மை. பறவை வாழிடங்களை காப்பதன் அவசியத்தை இந்த நூல் ஓரளவேனும் உணர்த்தும் என்று நம்புகிறேன்
செங்குதச் சின்னான் [Red-vented Bulbul]
பூக்களை கொய்கிற
கைகளெனத் தெரிந்தும்,
மல்லிகைப் பந்தலில் கூடமைக்கிற
சின்னான் குருவிகளின்,
கிண்ண வடிவ கூட்டில்
நிறைந்திருக்கிறது கூடுதல்
நம்பிக்கை.






Reviews
There are no reviews yet.