புல்வெளிப் பறவைகளின் காதல் மொழி நூலைப் பற்றிய குறிப்பு
உருமறைத் தோற்றம் புல்வெளிப்பறவைகளின் முக்கிய அம்சம்.
அதிக உயரமோ, அகண்ட தூரமோ பறக்காது.
இந்தப் பறவைகள் இணையைக் கவரும்விதம் ஆச்சர்யமூட்டுவது.
சிஸ்ட்டன்ட் பெட்டிட்ஸ் சேன்ட்குரோஸ்’ என்பது ஒரு பறவை.
இதில் ஆண் பறவை தன் சிறகுகளை விரித்துக் காட்டும்.
அதில் பல ஆண்பறவைகள் சேர்ந்து கொள்ளும்.
இதில் எந்தப் பறவை சிறகுகளை விரிப்பதில் சிறந்ததோ அதைப் பெண் பறவை தேர்ந்தெடுத்து இணை சேரும்.
அதேபோல் வரகுக்கோழி.
அதில் ஆண் பறவை ஓரிடத்தில் நின்றுகொண்டே ஐந்தடி, ஆறடி உயரத்துக்கு குதிக்கும்.
அதனுடன் மற்ற ஆண்பறவைகளும் சேர்ந்து குதிக்கும்.
இவை ஒரே இடத்தில் இப்படிக் குதிப்பது ஓர் அற்புத அழகு.
இந்த ஆண் பறவைகள் குதிக்கும்போது அதைப் பார்க்கும் பெண் பறவை ‘இவற்றில் எது உயரமாகக் குதிக்கிறது? எது
வலிமையாக இருக்கிறது?’ என்று தெரிந்துகொண்டு அதனுடன் இணை சேருகிறது.
இப்படியான வரகுக்கோழிகள் வசிக்கும் புல்வெளிகளில் நாம் மரங்களை நடுகிறோம்.
பாசன வாய்க்கால்கள் அமைந்து பயிர் செய்கிறோம்.
அதனால் இவற்றின் இந்த இனக்கவர்ச்சிக்கான நடனம் அடிபட்டுப் போகிறது.
அதனால் இதன் இயல்புத்தன்மை மாறி, அது தகுதியான ஆண் பறவையைத் தேர்ந்தெடுக்க முடிவதில்லை.
ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் எக்கச்சக்கமாக இருந்த வரகுக்கோழி இப்போதெல்லாம் காணாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம் என்று புல்வெளிப் பறவைகளின் காதல் மொழி எனும் இப்புத்தகத்தில் இந்நூலின் ஆசிரியர் கூறுகிறார்.





Reviews
There are no reviews yet.