சூழலியல்: அரசியல், பொருளியல் நூல் குறிப்பு
சூழலியல்: அரசியல் பொருளியல் ஒரு மனிதரின் தரம் அவரது நுகர்வு அளவை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது.
அந்த நுகர்வையும் அதற்கான சந்தையையும் பாதுகாத்து வளர்ப்பது அரசின் கடமையாகக் கொள்ளப்படுகிறது.
மனித இணக்கத்திற்கான கல்வி, மக்கள் நலத்துக்கான மருத்துவம், தூய்மையான சுற்றுச்சூழல், அமைதியான வாழ்க்கை ஆகிய எதுவும் அரசின் கடமையாக இல்லை!
உலகை ஆட்டிப்படைத்துவரும் இந்த ‘வளர்ச்சி வாதம்’ தான், இந்தப் பூமியை வாழ தகுதியற்றதாக மாற்றி வருகிறது.
போரும் பதற்றமும் இந்த வளர்ச்சி வாதத்தின் பிரிக்க முடியாத கூறுகள்!
‘ஆதார்’ என்றும் ‘டிஜிட்டல் இந்தியா’ என்றும் ஒவ்வொருவரும் அரசின் கண் காணிப்பில் வைக்கப்படுவதும் இந்த ‘வளர்ச்சி வாத’த்தின் தவிர்க்க முடியாத விளைவு!
தேர்தல் அரசியலும், மக்களுக்கான சனநாயகமும் வேறு வேறு திசையில் பயணிப்பதும் ‘வளர்ச்சி வாத’த்தின் விளைவே ஆகும்!
அரசும் அரசியல் கட்சிகளும், பெருங்குழுமங்களும் குற்றக்கும்பலும் ஒருங்கிணைந்த ஒட்டுண்ணி வலைப்பின்னல் இந்த ‘வளர்ச்சி வாத’த்தின் விளை பொருள் ஆகும்!
சூழலியல்: அரசியல் பொருளியல் ஒரு மனிதரின் தரம் அவரது நுகர்வு அளவை வைத்து எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது என்றுக் கூறும் நூல்.
Reviews
There are no reviews yet.