தாய்த் தெய்வம் ஓர் அறிமுகம் என்ற நூலைப் பற்றி
தெய்வ வழிபாடு என்பது உலகில் உள்ள அனைத்து மதங்களாலும் மனிதர்களை நெறிப்படுத்த ஏற்படுத்தப்பட்ட ஒன்றாகும்.
இதில் உலக அளவில் வாழும் அனைத்து மக்களும் ஆதியில் தாய்த்தெய்வ வழிபாட்டை பின்பற்றினார்கள்.
தொல்மாந்தர்களின் வேட்டைச் சமூகம், வேளாண் சமூகமாக வளர ஆரம்பித்த காலகட்டத்தில் வளமை நிறைந்த இயற்கையின் அனைத்தையும் பெண்ணாய் பாவித்தனர்.
அதற்குக் காரணம் பிள்ளைப்பேறு.
ஒரு பெண்ணால் ஓர் உயிரை உருவாக்க முடிகின்றது என்பதை உணர ஆரம்பித்தவர்கள் அனைத்திலும் பெண்ணை முன்னிறுத்தி, வளமை தரும் அனைத்தையும் தாய்த்தெய்வமாக கருதி வணங்க ஆரம்பித்தனர்.
அவர்களது அந்நம்பிக்கை ஒரு குறிப்பிட்ட நாடு, இனக்குழு மக்கள் என்றில்லாமல் உலக அளவில் ஒன்றுபோலவே இருந்தது ஆச்சரியமே.





Reviews
There are no reviews yet.