வறீதையா கான்ஸ்தந்தின்
முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின் (1959, பள்ளம்துறை) தூத்தூர் செயின்ட் ஜூட்ஸ் கல்லூரியில் 1982 முதல் மீன்வளமும் விலங்கியலும் கற்பித்து 2018இல் பணிநிறைவு பெற்றவர். 1990களில் தொடங்கி கடல், மீன்வளம், கடல்சார் மக்கள் குறித்து ஆய்விலும் எழுத்திலும் தொடர்ந்து தீவிரமாய் இயங்கி வருகிறார்.
‘கடலம்மா பேசுறங் கண்ணு ‘, ‘நெய்தல் சுவடுகள்’, ‘பழவேற்காடு முதல் நீரோடி வரை’, ‘மூதாய் மரம்’, ‘The Sea Tribes under Seige’ உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட நூல்களையும் ஓர் ஆவணப் படத்தையும் படைத்துள்ளார்.
நெய்தல் வெளி, கடல்வெளி பதிப்பகங்களின் நிறுவன பதிப்பாளராக ஏராளம் படைப்பாளிகளைத் தமிழுக்கு அறிமுகப் படுத்தியுள்ளார். விகடன் இலக்கிய விருது (2015), அமுதன் அடிகள் இலக்கியப் பரிசு (2016), மம்மா ஆதா விருது (2016) முதலிய பல விருதுகள் பெற்றுள்ளார்.
Reviews
There are no reviews yet.